தாடி பற்றிய விமர்சனம் ; தொடரும் டீசரில் பதில் சொன்ன மோகன்லால் | நீதிமன்றம் செல்வதை புறக்கணித்து விட்டு சினிமா பிரிவியூ பார்க்க சென்ற நடிகர் தர்ஷன் | அஜித் மகனாக நடிக்கும் வாய்ப்பை மிஸ் பண்ணினேன் ; பிரேமலு ஹீரோ வருத்தம் | அஜித்தின் 'குட் பேட் அக்லி'யால் காத்து வாங்கும் வீர தீர சூரன்! | சூர்யாவின் ரெட்ரோ சிங்கிள் பாடல் வெளியானது! | நன்றி மாமே - பிரபு, ஆதிக்குடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்துடன் திரிஷா வெளியிட்ட பதிவு! | கமலின் 237வது படம்! புதிய அப்டேட் கொடுத்த ராஜ்கமல் பிலிம்ஸ்!! | அஜித்துக்காக ஐ அம் வெயிட்டிங்! - வெங்கட் பிரபு சொன்ன தகவல் | அடுத்த நட்சத்திர காதல் கிசுகிசு - துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன் | குடும்பத்தாருடன் ஹைதராபாத் திரும்பிய பவன் கல்யாண் |
சின்னதிரையில் ஒளிபரப்பாகும் தொடர்களில் நடித்து வருகிறவர் ஜெனிபர். 24 வயதான இவர் சென்னை மணலியில் வசித்து வருகிறார். ஏற்கெனவே சரவணன் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கு நடந்த வருகிறது. அதன்பிறகு தொலைக்காட்சி தொடரின் துணை இயக்குனர் நவீன் குமார் என்பவரை காதலித்து அவருடன் வசித்து வந்திருக்கிறார்.
இந்த நிலையில் தன்னை நவீன் குமார் அடித்து நிர்வாணப்படுத்தி துன்புறுத்துவதாக நேற்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
நான் சின்னத்திரையில் பல வருடங்களாக நடித்து வருகிறேன். தற்போது வானத்தைபோல தொடரில் நடித்து வருகிறேன். நான் கடந்த 2019-ம் ஆண்டு சரவணன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டேன். கருத்து வேறுபாடு காரணமாக அவரை நான் பிரிந்து விட்டேன். விவாகரத்து வழக்கு சென்னை குடும்ப நலக் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் தொலைக்காட்சி தொடர்களில் துணை இயக்குனராக பணியாற்றி வந்த நவீன்குமார் என்பவர் என்னை காதலிப்பதாக தெரிவித்தார். திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை காட்டினார். அந்த ஆசையில் அவர் கேட்டபோதெல்லாம் பணம் கொடுத்தேன். அவருக்கு தொலைக்காட்சி தொடர் துணை இயக்குனர் வேலை போய்விட்டது. அதனால் என்னை மிரட்டி பணம் பறிக்க ஆரம்பித்தார். 2 லட்சம் வரை பணம் கொடுத்துள்ளேன்.
மேலும் 5 லட்சம் பணம் கேட்டார். அதை கொடுக்க மறுத்ததால் என்னை மிரட்டி அரை நிர்வாண கோலத்தில் படம் பிடித்தார். அந்த படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன் என்று மிரட்டியும் என்னிடம் தொடர்ந்து பணம் கேட்டார். அடித்து துன்புறுத்தினார். அவர் மீது மணலி போலீசில் புகார் கொடுத்தேன். போலீசார் வழக்குப்பதிவு செய்து நவீன் குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஆனால் ஜாமீனில் வெளிவந்த நவீன்குமார் வழக்கை வாபஸ் வாங்கச்சொல்லி தொடர்ந்து மிரட்டுகிறார். அடியாட்களுடன் எங்கள் வீட்டுக்கு எந்து என் பெற்றோரை தாக்கினார். என் தங்கையை மானபங்கம் செய்ய முயற்சித்தார். என்னை அரைநிர்வாணமாக்கி படம் எடுத்தார். அதனை அவரிடம் இருந்து போலீசார் மீட்டுத் தரவேண்டும். அவரால் எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. அவருக்கு உயர் போலீஸ் அதிகாரிகள் சிலர் உதவி செய்து வருகிறார்கள். எனக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். என்றார்.