ஏ.ஆர்.ரஹ்மான் வழக்கறிஞர் எச்சரிக்கை | ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் ‛ஸ்டார்' பட நடிகை | நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படப்பிடிப்பு நிறைவு பெற்றது | துப்பாக்கிய பிடிங்க : விஜய்யின் பெருந்தன்மை - சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | விஷ்ணு விஷால் படத்தில் நிகழ்ந்த மாற்றம் | புஷ்பா 2 டிரைலர் - தெலுங்கை விட ஹிந்திக்கு அதிக வரவேற்பு | அட்லியின் அடுத்த படம் : வெளியானது புதிய அப்டேட் | அஜித்தின் குட் பேட் அக்லி படப்பிடிப்பு விரைவில் முடிவடைகிறது | சூர்யாவின் கர்ணா ஹிந்தி படம் டிராப்பா? | டில்லியில் சிறிய அளவில் பிறந்தநாள் கொண்டாடிய நயன்தாரா |
இயக்குனர் ஷங்கர் அடுத்தடுத்த சிக்கல்களில் சிக்கி வருவது அவருடைய ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கமல்ஹாசன் நடிக்க 'இந்தியன் 2' படத்தை முக்கால்வாசி முடித்த நிலையில் அடுத்து தெலுங்கு, ஹிந்தி என இரண்டு படங்களை இயக்க உள்ளதைப் பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டார்.
இந்நிலையில் தங்களது 'இந்தியன் 2' படத்தை முடிக்காமல் வேறு எந்தப் படத்தையும் இயக்கக் கூடாது என ஷங்கருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது தயாரிப்பு நிறுவனமான லைகா.
தற்போது ஷங்கர் நேற்று அறிவித்த 'அந்நியன்' ஹிந்தி ரீமேக்கிற்கு எதிராக வக்கீல் நோட்டீஸ் ஒன்றை அனுப்ப உள்ளது அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஆஸ்கர் பிலிம்ஸ்.
இது குறித்து அவர்கள் ஷங்கருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், “அந்நியன்' படத்தைத் தழுவி அதன் ஹிந்தி வடிவத்தை நீங்கள் இயக்கப் போவதாக அறிந்து நான் கடும் அதிர்ச்சியடைந்தேன். அப்படத்திற்கான மொத்த கதை உரிமையை எழுத்தாளர் சுஜாதாவிடமிருந்து மொத்த தொகையையும் கொடுத்து நான் வாங்கியுள்ளேன். அதற்கான முறையான ஆதாரங்கள், ஆவணங்கள் என்னிடத்தில் உள்ளன. அந்தக் கதையின் மொத்த உரிமையாளர் நான்தான். அப்படியிருக்கையில், அதன் தழுவலாகவோ, ரீமேக்காகவோ, காப்பியாகவே, எனது அனுமதியில்லாமல் படமாக்குவது சட்டத்திற்குப் புறம்பானது.
'பாய்ஸ்' படத்தை இயக்கியதன் மூலம் உங்களது இமேஜ் பாதிக்கப்பட்டு நீங்கள் கடுமையான மன வருத்தத்தில் இருந்த போது, நான் உங்களுக்கு 'அந்நியன்' படத்தை இயக்கும் வாய்ப்பைக் கொடுத்தேன். அப்படத்தின் மூலம் இழந்த உங்களது இமேஜயும், எனது ஆதரவால் மட்டுமே மீட்டெடுத்தீர்கள்.
அவற்றையெல்லாம் மறந்துவிட்டு, என்னிடம் எந்த விதமான தகவலும் சொல்லாமல் என்னுடைய வெற்றிப் படமான 'அந்நியன்' படத்தை தழுவி எடுப்பதன் மூலம் அதன் வெற்றியை ஹிந்தியில் அறுவடை செய்ய நினைக்கிறீர்கள். நீங்கள் நெறிமுறை தவறாமல் இருப்பீர்கள் என நம்புகிறேன். அப்படியிருக்க இப்படி சட்டத்திற்குப் புறம்பான விதத்தில் எப்படி கீழிறங்கி இதைச் செய்கிறீர்கள் என ஆச்சரியப்படுகிறேன்.
என்னிடம் மொத்த உரிமையும் உள்ள படத்தின் கதையை இப்படி சட்டத்திற்குப் புறம்பாகக் காப்பியடிக்காமல், உங்களது அனைத்து நடவடிக்கைகளையும் உடனே நிறுத்துவீர்கள் என கேட்டுக் கொள்கிறேன். இது தொடர்பான வக்கீல் நோட்டீஸ் இக்கடிதத்திற்குப் பின் வரும்,” என தயாரிப்பாளர் ரவிச்சந்திரன் அவரது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து ஷங்கர் என்ன சொல்லப் போகிறார் என்பதைப் பொறுத்தே அடுத்த கட்ட நடவடிக்கை இருக்க வாய்ப்புள்ளது.