ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ், ராஜிஷா விஜயன், லால், நட்டி நடராஜ், யோகிபாபு உள்பட பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் கர்ணன். சந்தோஷ் நாராயணன இசையமைத்துள்ள இப்படம் கடந்த 9-ந்தேதி அன்று வெளியாகி வசூலை பெற்று வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் கொடியன் குளத்தில் நடந்த கலவரத்தை மையப்படுத்தி இப்படத்தை எடுத்துள்ளார் மாரி செல்வராஜ். இப்படத்திற்கு சாதி ரீதியான விமர்சனங்களும் எழுந்துள்ளனர்.
இந்நிலையில் கர்ணன் படம் குறித்து நடிகர் உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டரில் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், கர்ணன் பார்த்தேன். ஒடுக்கப்பட்ட மக்களின் வலியையும், மறுக்கப்படட அவர்களின் உரிமையையும் மிகைப்படுத்தல் இன்றி எடுக்கப்படட இப்படம் கொண்டாடப்பட வேண்டியது. நண்பர் தனுஷ், அண்ணன் வி கிரியேசன்ஸ் எஸ்.தாணு, இயக்குனர் மாரி செல்வராஜ் ஆகிய மூவரிடமும் பேசி அன்பையும், வாழ்த்தையும் தெரிவித்தேன்.
மேலும், 1995ல் அதிமுக ஆட்சியில் நடந்த கொடியன்குளம் கலவரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் அச்சம்பவம், 1997ல் கழக ஆட்சியில் நடந்தது போல் காண்பிக்கப்பட்டுள்ளது. இதனை தயாரிப்பாளர், இயக்குனரிடம் சுட்டிக் காட்டினேன். அந்த தவறை இரு தினங்களில் சரி செய்து விடுகிறோம் என உறுதியளித்தனர் நன்றி என பதிவிட்டுள்ளார்.