நடிகை சமீரா ரெட்டிக்கு கொரோனா | விஜய்யைத் தொடர்ந்து சூர்யா படத்தில் பூஜா ஹெக்டே | முதல் விளம்பரப் படத்தை நினைவு கூர்ந்த ஆண்ட்ரியா | மீண்டும் வருவது மகிழ்ச்சி - சித்தார்த் | முகம் வீங்கிப்போன ரைசா - ஏன் என்னாச்சு? | புதிய படங்களின் வெளியீடுகள் தள்ளிப் போகுமா? | பிரபாஸ் படத்தில் அமிதாப் | விவேக் குடும்பத்தினர் நன்றி | சிவகார்த்திகேயனுடன் மோதும் விஜய் ஆண்டனி | கவர்ச்சி போட்டோக்களை அள்ளி வீசும் சாக்ஷி |
சின்னத்திரையில் ‛குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான பவித்ரா லட்சுமி, இப்போது தமிழில் கதாநாயகியாகி உள்ளார். காமெடி நடிகர் சதீஷ் ஹீரோவாக நடிக்கும் படத்தில் இவர் நடிக்கிறார். கிஷோர் ராஜ்குமார் இயக்கும் இப்படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. அஜீஷ் அசோக் இசையமைக்க, பிரவீன் ஒளிப்பதிவு செய்கிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் பூஜையில் நடிகர் சிவகார்த்திகேயன் பங்கேற்று படக்குழுவை வாழ்த்தினார். கவுண்டமணி, வடிவேலு, சந்தானம், யோகிபாபு, சூரி வரிசையில் சதீஷும் ஹீரோவாகி உள்ளார்.
இயக்குநர் கிஷோர் ராஜ்குமார், “மிகவும் வித்தியாசமான இந்த படத்தின் கதை நகைச்சுவை ததும்ப விவரிக்கப்பட உள்ளது. குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பெரிய திரையில் கண்டு மகிழும் வகையிலான பேண்டசி காமெடியாக இத்திரைப்படம் திகழும்,” என்கிறார்.