தெலுங்கில் அறிமுகமாகும் பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா! | ஓவியாவை அசிங்கமாக விமர்சிக்கும் விஜய் ரசிகர்கள் | ஜெயிலர் -2வில் நடிக்க அழைப்பு வருமா? தமன்னா எதிர்பார்ப்பு | தெலுங்கு புரமோஷனில் கன்னடத்தில் பேசி விமர்சனங்களில் சிக்கிய ரிஷப் ஷெட்டி! | 250 கோடி வசூலைக் கடந்த பவன் கல்யாணின் 'ஓஜி' | அக்டோபர் 9ம் தேதி ஓடிடியில் வெளியாகும் வார்-2! | ப்ரீ புக்கிங் - தனுஷின் இட்லி கடை எத்தனை கோடி வசூலித்துள்ளது? | அல்லு அர்ஜுனை ஆட்டுவித்த ஜப்பான் நடன இயக்குனர் | சினிமாவுக்கு மகன் வருவாரா அஜித் சொன்ன பதில் | 2வது படத்திலேயே அம்மாவாக நடிப்பது தவறா? தர்ஷனா கேள்வி |
திருமுருகன் இயக்கத்தில் சுமார் ஐந்து ஆண்டுகள் வெற்றிகரமான ஒளிபரப்பான சீரியல் நாதஸ்வரம். மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்ற இந்தச் சீரியலில் நாயகன் கோபியின் முறைப்பெண்ணாக நடித்திருந்தவர் கீதாஞ்சலி. இந்த சீரியலை அடுத்து ராதிகாவின் 'வாணி ராணி' 'நிறம் மாறாத பூக்கள்' 'ராஜா ராணி' உள்ளிட்ட சீரியலிலும், ஒரு சில திரைப்படங்களிலும் அவர் நடித்தார்.
இந்நிலையில் கடந்த 2-ம் தேதி கீதாஞ்சலிக்கும் திருவாரூரைச் சேர்ந்த கிரிராஜ் என்பவருக்கும் திருமணம் நடந்துள்ளது. பெற்றோர்கள் பார்த்து முடிவு செய்த இந்தத் திருமணத்தில் நண்பர்கள் உற்றார் உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டதாகத் தெரிகிறது. மணமகன் கிரிராஜ் துபாயில் வேலை பார்த்து வருவதால் விரைவில் கீதாஞ்சலியும் துபாய் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.