புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
டிபிகே இண்டர்நேஷ்னல் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடேட் சார்பில் டில்லி பாபு தயாரிக்கும் படம் மாயமுகி. பி.எம்.ரவி நாயக் இயக்குகிறார். இன்னொருவன், அவள் பெயர் தமிழரசி , நீர்ப்பறவை, வீரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கும் மனோ சித்ரா மீண்டும் நாயகியாக நடிக்கிறார். கதாநாயகனாக ரவிதேஜா வர்மா நடிக்கிறார். தமிழில் இவருக்கு இதுதான் முதல் படம் என்றாலும், தெலுங்கில் பல படங்களில் நடித்திருக்கிறார்.
இவர்களுடன் சத்யதேவ், தூத்துக்குடி கார்த்திகா, ஆம்னி, சுவாதி உள்பட பலர் நடிக்கிறார்கள். பிரகாஷ் என்.பத்மா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஜெயன் பாலா இசையமைக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் மாயமுகி இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உள்ளது.
படம் பற்றி இயக்குனர் ரவி நாயக் கூறியதாவது: தமிழ் சினிமாவில் பேண்டஸி திரைப்படங்களின் வருகை மிக மிக அரிதாகி வரும் நிலையில், பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் திரையரங்கிற்கு அழைத்து வரும் ஆன்மீக பேண்டஸி திரைப்படமாக உருவாகிறது. பேண்டஸி ஜானர் திரைப்படமாக இருந்தாலும், இப்படத்தின் கதைக்களம் சமூக பிரச்சனைகள் குறித்தும் பேசுகிறது. என்கிறார்.