பராசக்தி படத்தை வெளியிட தடையில்லை : நீதிமன்றம் உத்தரவு | பத்து நாள் ராஜாவாக சதீஷ் | சிறிய படங்களின் பிரச்னைகள் தீருமா? | ஜனநாயகன் டிரைலர் நாளை(ஜன., 3) வெளியீடு | புத்தாண்டை முன்னிட்டு எத்தனை படங்களின் அப்டேட் வந்தது தெரியுமா ? | தியேட்டர்களை எதிர்த்து ஓடிடியில் வெளியான 'சல்லியர்கள்' | தெலுங்குக்கு முன்னுரிமை தரும் நயன்தாரா | 2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! |

சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்தபோது அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து 'கோ பேக் மோடி என்ற ஹேஷ்டேக் சமூகவலைதளத்தில் டிரெண்டிங் ஆனது. நடிகை ஓவியாவும் மோடிக்கு எதிரான இந்த பதிவை வெளியிட்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஓவியாவுக்கு ஆதரவாக அவரது ரசிகர்களும் அந்தப் பதிவைப் பகிர்ந்தனர். பலர் ஓவியாவை விமர்சித்தும், கண்டித்தும் பதிவுகளை வெளியிட்டனர்.
பிக் பாஸ் முதல் சீசன் போட்டியாளாரும், பாஜக நிர்வாகியுமான நடிகை காயத்ரி ரகுராமும் ஓவியாவைக் கண்டித்து பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதோடு ஓவியா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி பாஜக சார்பில் சி.பி.சி.ஐ.டி. சைபர் கிரைம் போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த சர்ச்சைகளுக்கு பதில் அளிக்கும் வகையில் ஓவியா தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ஜெய்ஹிந்த் கருத்து சுதந்திரம் என பதிவிட்டுள்ளார்.