'குடும்பம் ஒரு கதம்பம்' புகழ் குரியகோஸ் ரங்கா காலமானார் : யார் இவர்... சின்ன ரீ-வைண்ட்! | வசூல் நாயகிகளில் முதலிடம் பிடித்த கல்யாணி பிரியதர்ஷன் | தமிழ் மார்க்கெட்டை பிடிக்கும் மலையாள படங்கள் | மாநாடு கவலை அளிக்கிறது : விஜய்யை தாக்கிய வசந்தபாலன் | 17 ஆண்டு கனவு நனவானது : ஹீரோவான ‛பாண்டியன் ஸ்டோர்ஸ்' குமரன் நெகிழ்ச்சி | ரூ.550 கோடியை தாண்டியதா கூலி வசூல் | லோகா சாப்ட்டர் 1 சந்திரா படத்திற்கு தனது திரைக்கதையால் வெற்றி தேடித்தந்த நடிகை | பெண் இயக்குனருக்கும், யஷ்க்கும் கருத்து வேறுபாடா? : மலையாள நடிகர் விளக்கம் | தங்கம் கடத்தலில் ஈடுபட்டு சிறையில் இருக்கும் நடிகைக்கு 102 கோடி அபராதம் | குருவாயூரப்பனை தரிசனம் செய்த அக்ஷய் குமார் |
தமிழ் சினிமாவில் சில முக்கிய பிரபலங்களின் திரைப்படங்கள் கூட சில ஆண்டுகளாக வெளிவராமல் முடங்கி நிற்பது ஆச்சரியமான ஒன்று. தமிழ்த் திரையுலகத்தில் அதிகப் படங்களில் நடிப்பதில் விஜய் சேதுபதிக்கும், ஜிவி பிரகாஷுக்கும் இடையேதான் போட்டி. இருவரும் ஏறக்குறைய பத்து படங்களில் நடித்து வருகிறார்கள்.
ஜிவி பிரகாஷ் 2015ல் வெளிவந்த 'டார்லிங்' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதன்பின் அவர் நடித்த படங்களில் 'த்ரிஷா இல்லனா நயன்தாரா' படம் மட்டுமே வெற்றிகரமாக ஓடியது. மற்ற படங்கள் வந்ததும் தெரியாமல் போனதும் தெரியாமல் ஓடிப் போனது.
ஜிவி பிரகாஷ் நடித்துள்ள 'ஐங்கரன், ஆயிரம் ஜென்மங்கள், அடங்காதே, ஜெயில், 4ஜி,' ஆகிய படங்கள் எப்போது திரைக்கு வரும் என்பது தெரியாமலே உள்ளது. கடந்த வருடம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டாலும் அப்படங்களை வெளியிடுவதைப் பற்றி அதன் தயாரிப்பாளர்கள் என்ன முடிவெடுத்துள்ளார்கள் என்பது தெரியவில்லை. தற்போது, 'காதலைத் தேடி நித்யாநந்தா, காதலிக்க யாருமில்லை, பேச்சுலர்,' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் ஜிவி.
ஜிவி பிரகாஷ் படங்களைப் போலவே த்ரிஷா நடித்து முடித்துள்ள “பரமபத விளையாட்டு, கர்ஜனை, சதுரங்க வேட்டை 2' ஆகிய படங்கள் எப்போது வரும் என்பதும் தெரியவில்லை. இந்தப் படங்களைத் தவிர 'ராங்கி, சுகர், பொன்னியின் செல்வன்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார் த்ரிஷா.
ஜிவி பிரகாஷ், த்ரிஷா ஆகியோரது படங்களுக்கு இந்த நிலைமை என்றால் தமிழ் சினிமா எப்படியான நிலையில் உள்ளது என்பதை நினைத்தால் அதிர்ச்சிதான் மிஞ்சும்.