சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது | இந்தியன் 3 படத்தின் பணிகள் மீண்டும் துவங்கியது | இறுதி கட்டத்தில் 'லவ் மேரேஜ்' |
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் படம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என கடந்த சில நாட்களாக திரையுலகத்தில் ஒரு பரபரப்பு நிலவி வருகிறது. அப்படத்தின் தயாரிப்பாளரான சஷிகாந்த், டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் தளத்தில் தனுஷைப் பின் தொடர்வதிலிருந்து விலகிவிட்டார். மேலும், அவர்களது யு டியூப் சேனலில் வைத்திருந்த ஜகமே தந்திரம் பட போஸ்டரையும் நீக்கிவிட்டார்.
இதனால், கோபமடைந்த தனுஷ் ரசிகர்கள் நேற்று டுவிட்டர் தளத்தில் தயாரிப்பாளர் சஷிகாந்தை கடுமையாக விமர்சித்து பதிவிட்டனர். இந்நிலையில் தனுஷ் நடித்துள்ள கர்ணன் படம் ஏப்ரல் மாதம் தியேட்டர்களில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கு நன்றி தெரிவித்து தனுஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கர்ணன் ஏப்ரல் 2021ல் தியேட்டர்களில் வெளியாகிறது. தேவையான சமயத்தில் உற்சாகமூட்டும் தேவையான ஒரு செய்தி. தியேட்டர் ஓனர்கள், வினியோகஸ்தர்கள், மற்றும் சினிமா மற்றும் தியேட்டர்களை நம்பி வாழும் அனைவரையும் நினைத்து வெளியிடுவதற்கு, உங்களுக்கு வேறு வழிகள் இருந்தாலும், நன்றி தாணு சார். என்னுடைய ரசிகர்கள் சார்பாக மிகப் பெரும் நன்றி. இது அவர்களுக்கு பல அர்த்தத்தைக் கொடுக்கும்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தனுஷின் இந்த அறிக்கை ஜகமே தந்திரம் தயாரிப்பாளரை மறைமுகமாகக் குறிப்பிடுவது போலவும், தன் ரசிகர்களுக்கு ஆதரவு சொல்வது போலவும் உள்ளது.