தனுஷ் - ஐஸ்வர்யாவுக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம் | போர்ஷே கார் உடன் ரேஸ் களத்தில் அஜித் : தமிழக அரசின் SDAT லோகோவும் அச்சிடல் | விவாகரத்து வழக்கு : ஜெயம் ரவி - ஆர்த்தி நேரில் ஆஜர் | தென்னிந்திய படங்களுக்கு வரவேற்பு ஏன் - தமன்னா பதில் | சந்தானம் பட இயக்குனருடன் இணையும் ஜெயம் ரவி | கனிமொழிக்கும் எனக்குமிடையே 20 ஆண்டுகால நட்பு : சொல்கிறார் ஐஸ்வர்யா ரஜினி | திருப்பதி கோவிலில் ஜோதிகா வழிபாடு | 15 ஆண்டு காதலை உறுதிப்படுத்திய கீர்த்தி சுரேஷ் | மாரி செல்வராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | சிவகார்த்திகேயன் படம் : ஜெயம் ரவி போட்ட கண்டிஷன் |
மலையாளத்தில் ஹிட் அடித்த ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் என்ற படத்தை தமிழில் 'கூகுள் குட்டப்பன்' என்ற பெயரில் ரீமேக் செய்து தயாரிக்கிறார் கே.எஸ்.ரவிக்குமார். இவரிடம் உதவியாளர்களாக இருந்த சபரி - சரவணன் இயக்க, பிக்பாஸ் புகழ் தர்ஷன், லாஸ்லியா மற்றும் யோகிபாபு என பலர் நடிக்கும் இந்த படத்தின் பூஜை இன்று(ஜன., 28) சென்னையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியின்போது ரஜினியுடன் மீண்டும் இணைந்து படம் பண்ணுவீர்களா? என்று கே.எஸ். ரவிக்குமாரிடம் நிருபர்கள் கேட்டபோது, ரஜினியுடன் நான் தொடர்பில் இருந்து தான் வருகிறேன். மாதம் ஒருமுறையாவது போன் செய்து நலம் விசாரிப்பேன். அந்த வகையில், சமீபத்தில பேசியபோது ராணா படத்தின் கதையை மீண்டும் ஒருமுறை சொல்லுங்கள் என்று கேட்டார். அப்போது கதை நன்றாக தான் உள்ளது. ஆனால் இப்போது உடல்நிலை இருக்கிற நிலையில் அந்த பண்ண முடியாது. உடல் சீரானதும் ராணா கதையை பண்ணுவோம் என்று கூறினார் என்றார்.
அதையடுத்து, நீங்கள் இயக்கி சூப்பர் ஹிட்டான படையப்பா, தெனாலி, வரலாறு போன்ற படங்களின் இரண்டாம் பாகத்தை இயக்கும் வாய்ப்பு உள்ளதா? என்று கேட்டபோது, நல்ல படமாக இயக்கினாலும் முதல் பாகத்துடன் ஒப்பிட்டுத்தான் பேசுவார்கள். அதனால் எனக்கு இரண்டாம் பாகம் இயக்குவதில் எப்போதுமே விருப்பம் இருந்ததில்லை என்றார் கே.எஸ்.ரவிக்குமார்.
கடந்த 2012ம் ஆண்டில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ராணா படத்தில் நடிக்கயிருந்தார் ரஜினி. ஆனால் அந்த படத்தின் பூஜை சென்னையில் உள்ள ஏ.வி.எம் ஸ்டுடியோவில் நடைபெற்றபோதே ரஜினிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு அதையடுத்து சிங்கப்பூருக்கு சென்று உடல் சிகிச்சை பெற்று சென்னை திரும்பினார். அதனால் அந்தப்படம் அப்போது டிராப் ஆனது குறிப்பிடத்தக்கது.