பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் | 3 மணி நேரம் 40 நிமிடம் ஓடப் போகும் 'பாகுபலி தி எபிக்' |
தமிழக மக்கள் புதுவரவு அரசியல்வாதியை தேடி வருகிறார்கள். அதனால் இன்னும் 10 ஆண்டுகளுக்குள் விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என்று அவரது தந்தையான டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகர் ஒரு சேனல் பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.
மேலும் அவர் கூறுகையில், கடந்த அக்டோபர் மாதம் நான் கட்சி ஆரம்பித்ததே விஜய்க்காகத் தான். அவரது அரசில் வாழ்க்கைக்கு ஒரு நல்ல அஸ்திவாரத்தை ஏற்படுத்த நினைத்தேன். ஆனால் அவரை சிலர் குழப்பி விட்டுக் கொண்டிருக்கிறார்கள். நான் அவருக்கு நல்லது தான் செய்து வருகிறேன் என்பது விஜய்க்கு ஒருநாள் புரியும். என்னை ப்போன்ற தந்தை கிடைப்பது ரொம்ப பெரிய விசயம்.
அதோடு, இந்த வயதில் தேர்தலில் போட்டியிட்டு பதவியை பிடிக்க வேண்டும் என்ற ஆசையெல்லாம் எனக்கு கிடையாது. நான் விஜய்யின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு செய்யும் விசயங்கள் இங்கே தவறாக புரிந்து கொள்ளப்பட்டு வருகிறது என்று கூறியுள்ள எஸ்.ஏ.சந்திரசேகர், விஜய் மக்கள் இயக்கமானது வியாபாரம் போல் மாறி விட்டது. மாஸ்டர் படத்தின் 100 ரூபாய் டிக்கெட்டுகளை அவர்கள் வாங்கி 1000 ரூபாய்க்கு விற்பனை செய்கிறார்கள் என்றும் ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.