போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை | ஆஸ்கர் லைப்ரரியில் இடம்பிடித்த தமிழர் படம் | பிளாஷ்பேக் : காரில் பயணம் செய்யாத நடிகை | பிளாஷ்பேக் : காப்பி மேல் காப்பி அடிக்கப்பட்ட படம் | கதாநாயகனாகத் தொடரும் சூரி, இடைவெளி விடும் சந்தானம்.. | நான் பெண்ணாக பிறந்திருந்தால் கமலை திருமணம் செய்திருப்பேன் : சிவராஜ்குமார் | ஜிங்குச்சா - கமல்ஹாசன், சிலம்பரசன் நடனத்தில்… முதல்பாடல் நாளை வெளியீடு | 100 கோடி ரூபாய் வீட்டிற்குக் குடிப்போகும் தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் |
பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று (ஜனவரி 13ம் தேதி) விஜய்யின் மாஸ்டர் படம் ரிலீசானது. கடந்தாண்டு ஏப்ரல் மாதமே ரிலீசாக வேண்டிய இப்படம், கிட்டத்தட்ட ஓராண்டுகளுக்குப் பின் ரிலீசாகி உள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நீண்ட நாட்கள் கழித்து விஜய்யுடன் அவரது பழைய நண்பர்கள் பலர் இந்தப் படத்தில் சேர்ந்து நடித்துள்ளனர். அவர்களில் முக்கியமானவர் நடிகர் ஸ்ரீமன்.
மாஸ்டர் ரிலீசாக உள்ள நிலையில் ஜனவரி 12ல் விஜய்யைச் சந்தித்துப் பேசியுள்ளார் ஸ்ரீமன். அந்த சந்திப்பு குறித்து தனது டுவிட்டரில், "லவ் யூ! ஒரு நட்சத்திரம் தனது பட வெளியீட்டுக்கு முந்தைய நாள் எவ்வளவு வேலைகளில் இருப்பார் என்று எனக்குத் தெரியும். சந்திப்புக்கு இது சரியான நேரம் கிடையாது. ஆனாலும், அவரைச் சந்திப்பது எனக்கு முக்கியமாகப்பட்டது. எனவே நான் அழைத்து, என் தேவையை விளக்கினேன். அடுத்த வார்த்தை, "வா ஸ்ரீ" என்றார். நட்புக்கு நீங்கள் தரும் முக்கியத்துவத்தை என்னால் கற்பனை கூட செய்ய முடியவில்லை. உங்கள் கனிவான இதயத்துக்கும், கடின உழைப்புக்கும் நீங்கள் ஜெயிப்பீர்கள்” என தெரிவித்துள்ளார்.