ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
சென்னை : தியேட்டர்களில் 100 சதவீதம் இருக்கைக்கு அனுமதி கொடுத்ததற்கு எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து அந்த முடிவை திரும்ப பெறுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே நடைமுறையில் உள்ள 50 சதவீத இருக்கைக்கு அனுமதி தொடரும் என தெரிவித்துள்ளது.
கொரோனா பிரச்னையால் மூடப்பட்ட தியேட்டர்கள் தீபாவளியை ஒட்டி தமிழகத்தில் 50 சதவீதம் இருக்கைகளுடன் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. ஆனாலும் புதிய படங்கள் மற்றும் முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகததால் மக்கள் தியேட்டருக்கு செல்ல விருப்பம் காட்டவில்லை. இதை 100 சதவீதமாக உயர்த்த தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் திரையுலகினர் கோரிக்கை வைத்தனர். பொங்கலுக்கு விஜய்யின் மாஸ்டர், சிம்புவின் ஈஸ்வரன் படங்கள் வெளியாவதால் இந்த கோரிக்கை மேலும் அதிகமானது. நடிகர் விஜய் கூட முதல்வரை சந்தித்து இது விஷயமாக பேசினார்.
இதையடுத்து 100 சதவீதம் இருக்கைக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது. இதை திரையுலகினர் வரவேற்றாலும் பொது மக்கள் மத்தியிலும், டாக்டர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து மத்திய அரசு இது தவறு என சுட்டிக்காட்டியது. இது சம்பந்தமாக சென்னை ஐகோர்ட், மதுரை ஐகோர்ட் கிளையில் தொடரப்பட்ட வழக்கிலுமே தமிழக அரசு இப்படி செய்தது தவறு என கூறப்பட்டுள்ளது. இந்த முடிவை அரசு திரும்ப பெற வேண்டும் என என தெரிவித்துள்ளது.
இந்நிலையில் முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்து இருப்பதாவது: தியேட்டர்களில் இருக்கை சம்பந்தமாக ஐகோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருப்பதாலும் , மத்திய அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளின் படி தியேட்டர்களுக்கு வழங்கப்பட்டிருந்த100 சதவீத இருக்கைக்கு அனுமதி என்பது வாபஸ் பெறப்படுகிறது. ஐகோர்ட் உத்தரவின் படி தியேட்டர்களில் கூடுதல் காட்சிகளை திரையிட்டுக் கொள்ளலாம். மேலும் முக கவசம் அணிவது, தனி நபர் இடைவெளியை கடைபிடிப்பது அவசியமாகும்.
இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்து உள்ளார்.