டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

தமிழ்த் திரையுலகில் பெரும் சாதனை படைத்த 'சின்னத்தம்பி' படத்தைத் தயாரித்த தயாரிப்பாளர் கே.பி. பிலிம்ஸ் பாலு சில தினங்களுக்கு முன்பு மரணமடைந்தார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சார்பாக நடைபெற்றது.
அப்போது நடிகர் விஷால் தன்னுடைய மேலாளரை அனுப்பி மறைந்த தயாரிப்பாளர் பாலு தயாரிப்பில் சரவணன் இயக்கத்தில் தான் நடிப்பதாக இருந்த படத்தின் பூஜை ஸ்டில்லைக் காட்டி உறுதி ஒன்றை அளித்துள்ளார்.
மார்ச் மாதம் அப்படத்தின் படப்பிடிப்பை ஆரம்பித்து நடத்தி, ஆறு மாதத்திற்குள் நடத்தி முடித்து அந்தப் படம் மூலம் வரும் லாபத் தொகை அனைத்தையும் மறைந்த தயாரிப்பாளர் பாலு குடும்பத்திற்கு வழங்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
விஷாலின் அந்த உதவியை நிகழ்ச்சிக்கு வந்திருந்த பாலுவின் குடும்பத்தினரும் மனமுவந்து ஏற்றுக் கொண்டுள்ளனராம். மேலும், தயாரிப்பாளர் பாலு, விஷாலுக்கு அட்வான்ஸ் ஆக வழங்கிய தொகையான 50 லட்ச ரூபாயையும் விஷால் திருப்பி அளித்துவிட்டாராம்.
விஷாலின் இந்த பேருதவியை மற்ற தயாரிப்பாளர்களும் வரவேற்று அனைவரும் இந்த படத்திற்கு ஒத்துழைப்பு தருவதாகக் கூறியுள்ளார்கள்.




