'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த தி கேர்ள் வித் தி டிராகன் படத்தின் இரண்டாம் பாகம் தி கேர்ள் இன் தி ஸ்பைடர் வெப். இதே பெயரில் வெளிவந்த நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. சூப்பர் ஹீரோக்களின் ஆக்ஷன் படம் போன்று இது சூப்பர் ஹீரோயின் ஆக்ஷன் படம்.
மிகச் சிறந்த நவீன தொழில்நுட்ப பெண் நிபுணர் கிளயர் போய். இவர் பத்திரிகையாளர் மைக்கேல் ப்ளாம்விஸ்ட்டுடன் இணைந்து நாட்டில் நடக்கும் பல ஊழல்களை அம்பலப்படுத்துகிறார். இதனால் ஊழல் செய்கிறவர்கள் ஒன்றாக இணைந்து இவர்களை தீர்த்து கட்ட நினைத்து ஒரு சதி திட்டத்தில் இவர்களை சிக்க வைக்கிறார்கள். அங்கிருந்து தப்பிப்பதோடு ஒட்டுமொத்த ஊழல் கும்பலையும் எப்படி பிடிக்கிறார்கள் என்பது கதை.
உலக புகழ்பெற்ற டோண்ட் ப்ரீத் படத்தை இயக்கிய பெட்அல்வரேஸ் இயக்கி உள்ளார். கொலம்பியா பிக்சர்ஸ், மெட்ரோ கோல்டன் மேயர் உள்பட 7 நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது. இந்தியாவில் சோனி பிக்சர்ஸ் வெளியிடுகிறது. வருகிற 23ந் தேதி உலகம் முழுவதும் வெளிவருகிறது. இந்தியாவில் ஹிந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் டப் செய்யப்பட்டு திரையிடப்படுகிறது.