'தக் லைப்' விவகாரம் : அப்போது குரல் கொடுக்காத விஜய்.. | ஜெயலலிதா மீது விமர்சனம்: கல்லெறியில் இருந்து காப்பாற்றிய பாக்யராஜ்: ரஜினி சொன்ன ரகசியம் | 'படையப்பா, பாபா' படங்களின் ரிசல்ட்: ஜோசியர் போல சொன்ன பாக்யராஜ்: சுவாரஸ்யம் பகிர்ந்த ரஜினி | 'புஷ்பா 2' சாதனையை முறியடித்த 'துரந்தர்' | கடைசி நேர பரபரப்பில் 'பராசக்தி' தணிக்கை விவகாரம் | ''சினிமாவுக்கு கடின காலம்... காப்பாற்றுங்கள்'': குரல் கொடுத்த கார்த்திக் சுப்பராஜ் | 'டாக்சிக்' படத்தால் பின்வாங்கியதா 'ஜனநாயகன்' ? | பின்வாங்கியது ஜனநாயகன்... முந்துமா பராசக்தி | விஜய்க்கு ஆதரவாக முதல் குரல் கொடுத்த அருள்நிதி பட இயக்குனர் | டாக்சிக் படம் : யஷ் பிறந்தநாளில் இந்த மாதிரியா அறிமுக வீடியோ வெளியிடுவது.? |

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் சர்கார். தீபாவளிக்கு திரைக்கு வரவிருக்கும் இந்த படம், நான் எழுதி எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்து வைத்துள்ள செங்கோல் கதையில் உருவாகியிருக்கிறது என்று வருண் ராஜேந்திரன் என்பவர் குற்றம் சாட்டியதோடு, வழக்கு தொடர்ந்திருக்கிறார்.
இந்நிலையில், சர்கார் படத்தின் கதைச்சுருக்கத்தை எழுத்தாளர் சங்கத்தலைவர் டைரக்டர் கே.பாக்யராஜிடம் முருகதாஸ் கொடுத்த பிறகு அதை படித்த அவரும் செங்கோலும், சர்காரும் ஒரே கதைதான் என்று சொன்னவர், வருண் ராஜேந்திரனுக்கு ஏதேனும் தொகையை கொடுத்து பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வருமாறு கூறியிருந்தார்.
ஆனால் முருகதாஸ், சர்கார் கதை என்னுடையதுதான். அதனால் யாருக்கும் பணம் கொடுத்து சரிகட்ட வேண்டிய அவசியமில்லை என்று சொன்னவர், நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை காத்திருப்பேன் எனறு கூறிவிட்டார்.
இந்த நேரத்தில், மகேஷ்பாபுவை வைத்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய ஸ்பைடர் படத்தை தயாரித்த தாகூர் மது என்பவர் டுவிட்டரில் ஒரு செய்தி வெளியிட்டிருக்கிறார். அதில், கடந்த 18 ஆண்டுகளாக நான் ஏ.ஆர்.முருகதாசுடன் பயணிக்கிறேன். 5 படங்களை அவரை வைத்து தயாரித்திருக்கிறேன். அவர் மிகவும் நேர்மையானவர். அவர் சொந்தமாக சிறந்த கதைகளை எழுதக்கூடிய ஆற்றல் மிக்கவர். அதனால் இன்னொருத்தரோட கதையை படமாக்க வேண்டிய அவசியம் அவருக்கில்லை என்று முருகதாசுக்கு ஆதரவாக தனது கருத்தினை பதிவிட்டுள்ளார்.