சிக்கலில் இருந்து மீண்ட ‛கருப்பு' | விஜய் தேவரகொண்டா படத்தில் ‛தி மம்மி' பட வில்லன் | லோகேஷ் கனகராஜின் அடுத்த படத்தின் அப்டேட் | கிரிக்கெட்டர் ஸ்ரீகாந்த் மகன் அனிருத்தா உடன் நடிகை சம்யுக்தா திருமணம் | காசியில் தனுஷ்: கங்கைக்கு ஆரத்தி எடுத்து பிரார்த்தனை | ரீரிலீஸ் படத்துக்கு ஆதரவு கொடுக்காத ஹீரோக்கள் | 'நிஞ்சா' பட பூஜையில் நாய்: ஏன் தெரியுமா? | டேனியல் பாலாஜி இறந்தவிட்டார் என நம்ப முடியல: பிபி180 இயக்குனர் வேதனை | கடும் போட்டியை சந்திக்கப் போகும் 'ஜனநாயகன்' | 'ஸ்பைடர்' தோல்வி என் பயணத்தைத் தடுத்தது : ரகுல் ப்ரீத் சிங் |

காக்கா முட்டை படத்தில் இரண்டு சிறுவர்களுக்கு அம்மாவாக நடித்து பிரபலமானவர் ஐஸ்வர்யா ராஜேஷ். அதையடுத்து பல படங்களில் கதாநாயகியாக நடித்து வருபவர், வடசென்னை படத்திற்கு பிறகு தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிக்கும் படத்தில் மூன்று நாயகிகளில் ஒருவராக அறிமுகமாகிறார்.
இதுபற்றி ஐஸ்வர்யா ராஜேஷ் கூறுகையில், தெலுங்கு என் தாய்மொழி என்பதால் சில வருடங்களாகவே தெலுங்கில் நடிக்க முயற்சி எடுத்து வந்தேன். அந்த வாய்ப்பு இப்போது தான் கிடைத்துள்ளது. அதுவும் விஜய் தேவரகொண்டாவுடன் தெலுங்கில் அறிமுகமாவது மகிழ்ச்சியாக உள்ளது. என் தந்தை ராஜேஷ், தெலுங்கில் 25 படங்கள் வரை நடித்தவர்.
இந்த தெலுங்கு படத்தில் மூன்று நாயகிகளில் ஒருவராகத்தான் நான் நடிக்கிறேன். விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடி என்பதை விட, ஒரு அழுத்தமான வேடத்தில் நடிக்கிறேன். எனக்கு பர்பாமென்ஸ் பண்ண நல்ல ஸ்கோப் உள்ள வேடம் தான். அதனால் தமிழைப்போலவே தெலுங்கிலும் இமேஜ் என்ற வட்டத்திற்குள் சிக்காத ஒரு நடிகையாக இடம் பிடிப்பேன் என்கிறார்.