அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் | 'கட்டா குஸ்தி 2' படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி இருக்கிறாரா? | கண்ணப்பா டீமுக்கும், ஹீரோயினுக்கும் என்ன பிரச்னை |
மம்முட்டி தமிழ், மலையாளம் என இருமொழிகளில் நடித்துள்ள படம் 'ஸ்ட்ரீட்லைட்ஸ்'. ஷம்சத் ஷைனுதீன் என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை நடைபெற்றது. இந்த விழாவில், தான் 'ஸ்ட்ரீட்லைட்ஸ்' படத்தை தமிழிலும் தயாரித்தது ஏன் என விளக்கம் கூறினார் மம்முட்டி.
இந்தப்படத்தின் கதை கேரளாவில் பிழைப்புக்காக வந்து குடியேறி வசிக்கும் தமிழ்க்குடும்பங்கள், குறிப்பாக சிறுவர்களின் பின்னணியில் தான் முழுதுமாக நகர்கிறதாம். கிட்டத்தட்ட பாதிப்படத்திற்கு தமிழ் வசனங்கள் இடம்பெற்றுள்ளதால் இதை அப்படியே தமிழிலும் தயாரித்து வெளியிட்டு விடலாமே என நினைத்து தான் இரண்டு மொழிகளிலும் இந்தப்படத்தை உருவாக்கினாராம் மம்முட்டி.
படத்தின் டிரைலரில் மொட்ட ராஜேந்திரன், “நீங்க நல்லா தமிழ் பேசுறீங்களே.. எப்படி..?” என கேட்க, அதற்கு மம்முட்டி, “எத்தனை ரஜினி படம் பார்த்திருக்கிறேன்” என பதில் சொல்கிறார். இந்த வசனம் தமிழ் ரசிகர்களிடம் படத்தை பிரபலபடுத்த உதவும் என்றாலும், மம்முட்டி இதற்கு முன் அவரது பல மலையாள படங்களிலேயே, ரஜினியை தூக்கிப்பிடிக்கும் விதமாக வசனங்கள் பேசியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.