50வது நாளில் 'யூத்' | ‛மிஸ்டர் எக்ஸ்' பட இயக்குனருடன் இணையும் விக்ரம் | மீண்டும் விளையாட்டு படத்தில் சிவகார்த்திகேயன், தமிழரசன் பச்சமுத்து | ‛சிந்து பைரவி, முகவரி' மாதிரி ‛சைக்கிள் கேப்' | கருப்பு டிரைலர் எப்ப? அப்டேட் கொடுத்த ஆர்.ஜே.பாலாஜி | கதையின் நாயகன் ஆன ‛மாமன்' இயக்குனர் | கதைநாயகனாகவும் நடிக்கிறேன், காமெடியனாகவும் வருகிறேன் : அப்புக்குட்டி | ஆர்.பி.சவுத்ரிக்கு இரங்கல், விஜய்க்கு ஆதரவு : சரி, கமல் எங்கே? | 25வது நாளில் 66 கோடி வசூலித்த லவ் இன்சூரன்ஸ் கம்பெனி | 300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'மோனிகா' பாடல் |

இயக்குனர் மற்றும் சின்னத்திரை சங்க உறுப்பினர் செய்யாறு ரவி, மாரடைப்பால் காலமானார். கார்த்தி நடித்த அரிச்சந்திரா, பிரபு நடித்த தர்மசீலன் படங்களை இயக்கியவர் செய்யாறு ரவி. அதன்பின்னர் படங்கள் இயக்க வாய்ப்பு வராததால் சின்னத்திரை பக்கம் சென்றார். சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், கோபுரம், பணம், ஆனந்தம் போன்ற சீரியல்களை இயக்கினார். தற்போது ஜீ தமிழில் உருவாகி வரும் ‛அன்னக்கொடியும் ஐந்து பெண்களும்' என்ற சீரியலை இயக்கி வந்தார். இதன் படப்பிடிப்புகள் சென்னையில் நடந்து வந்த நிலையில் இன்று(மார்ச் 11) பிற்பகல் 12 மணியளவில் திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதில் அவர் மரணம் அடைந்தார். ரவியின் உடல் அஞ்லிக்காக சென்னையில் அசோக் நகரில் உள்ளது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. செய்யாறு ரவியின் மரணம் சின்னத்திரை திரையுலகினர் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.