Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரியல் கெட்டப் லட்சுமிமேனனுக்கு ஒர்க்அவுட் ஆகவில்லையாம்!

28 ஜன, 2015 - 10:39 IST
எழுத்தின் அளவு:

அட்டக்கத்தி படத்தில் நடித்த நந்திதா அநத படத்தில் கிராமத்து கெட்டப்பில் நடித்ததால் அதன்பிறகு அவரை அந்த மாதிரி வேடங்களிலேயே அதிகமாக நடிகக வைத்தனர். அந்த கெட்டப் அவருக்கு கச்சிதமாக பொருந்தியதால் அவர் கிராமத்து பெண்தானோ என்று நினைக்கும் வகையில் அவரது நடிப்பும் இருந்தது. ஆனால் அவரோ நிஜத்தில் ரொம்ப மாடர்னான பெண்ணாம். தான் பெங்களூரில் இருந்தபோது எப்போதுமே மாடர்ன் கெட்டப்பில்தான் இருப்பாராம். நிஜ வாழ்க்கையில் அவர் படங்களில நடிப்பது போன்ற காஸ்டியூம்களை அணிந்து கொண்டதே இல்லை. அந்த வகையில் சினிமா மூலம்தான் வில்லேஜ் பெண்ணாக நான் வாழ்ந்திருக்கிறேன் என்கிறார் நந்திதா. அதேபோல் இப்போது லட்சுமிமேனனும் அவரை போன்றே கூறியுள்ளார். அதாவது கும்கி படத்தில் இருந்து சுந்தரபாண்டியன், குட்டிப்புலி, பாண்டியநாடு, மஞ்சப்பை, ஜிகர்தண்டா, கொம்பன் என பக்கா கிராமத்து பெண்ணாக நடித்திருந்தபோதிலும், நிஜத்தில் அவர் மாடர்னான பெண்ணாம். வீட்டிலும் சரி, வெளியில் செல்லும்போதும் சரி ஜீன்ஸ், டீசர்ட் போன்ற உடைகளைத்தான் அதிகமாக விரும்பி அணிவாராம்.அந்த வகையில், சினிமாவில் சிப்பாய் படத்தில் மட்டும்தான் அவரது நிஜ கெட்டப்பில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததாம். ஆனால் அந்த படம் இன்னமும் கிடப்பில் கிடக்கிறது. ஆக, எனக்கு சினிமாவில் ரியல் கெட்டப் ஒர்க்அவுட் ஆகவில்லை என்கிறார் லட்சுமிமேனன்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)