விஜய் ஆண்டனியின் 'அப்பா குட்டி' | காஜல் அகர்வாலின் ‛தி இந்தியா ஸ்டோரி' ஜூலை 24ல் ரிலீஸ் | பெத்தி படத்திலும் கவர்ச்சி கதாபாத்திரத்தில் ஜான்வி கபூர் | அரசன் செட்டுக்கு வந்த பிரியங்கா மோகன் | தெலுங்கிலும் லாபக் கணக்கை ஆரம்பித்த 'கருப்பு' | ‛என் இனிய பொன் நிலாவே' பாடல் வழக்கு ; முழு பாட்டிற்கும் உரிமை கோர முடியாது : இளையராஜா மனு தள்ளுபடி | அடுத்தடுத்து இந்தியத் திரையுலகத்தை கலக்கிய 'ஆர்ஆர்ஆர்' ஹீரோக்கள் | விஜய் முதல்வரானதும் கடகடவென உயர்ந்த இன்ஸ்டா பாலோயர்கள் | தம்பி பவன் கல்யாணுக்கு நன்றி சொன்ன சிரஞ்சீவி | சினிமாவில் போக்குவரத்து போலீஸ், நிஜத்தில் போக்குவரத்து அமைச்சர் |

'கிழக்கே போகும் ரயில்' படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகம் ஆனவர் நடிகை ராதிகா. அந்த வகையில் சினிமாவில் இந்த ஆண்டை 49வது ஆண்டாக கொண்டாடி வருகிறார். அவர் நடிக்கும் 'ஹாய்' படக்குழுவினர் இதை கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். அதில் ஹீரோயினாக நடிக்கும் நயன்தாரா, கவின் ஆகியோரும் அந்த கொண்டாட்டத்தில் பங்கேற்று ராதிகாவுக்கு வாழ்த்து கூறியுள்ளனர். இயக்குனர் கே.பாக்யராஜூம் அந்த நிகழ்வில் கலந்துள்ளார்.
அடுத்த ஆண்டு சினிமாவில் ராதிகா, பொன் விழா ஆண்டை அதாவது 50வது ஆண்டை கொண்டாடுகிறார். அதற்கு பாராட்டு விழா நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு முன்பு பொன்விழா கொண்டாடிய கமல்ஹாசனுக்கு தனியார் டிவி சார்பில் பாராட்டுவிழா நடத்தப்பட்டது. ரஜினிக்கு விழா நடத்தப்படவில்லை. ராதிகாவுக்கும், நடிகர் சங்கத்துக்கும் உரசல். அதனால் நடிகர் சங்கம் நடத்த வாய்ப்பில்லை. மற்றவர்கள் தனியார் அமைப்பினர் நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், 49 ஆண்டு கலை பயணத்தில் இதுவரை ராதிகா தேசியவிருது பெறவில்லை. 'தாய்கிழவி'க்காக அது அடுத்த ஆண்டு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.




