Advertisement

சிறப்புச்செய்திகள்

8 வார இடைவெளியில் ஓடிடி, தயாரிப்பாளர்கள் சம்மதிப்பார்களா? | அல்லு சினிமாஸ் 'புகழ் சுவர்' - அட்லிக்கு இடம் தந்த அல்லு அர்ஜுன் | மார்ச் 15 முதல் புதிய படங்களுக்கு சப் டைட்டில், ஆடியோ விளக்கம் கட்டாயம் | லாரி ஏறிச் சென்று படம் பார்த்தேன்: தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி | காதல் பிரிவில் அர்ஜுன் தாஸ்? | வேண்டுமென்றே சர்ச்சை... நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை: ராஷ்மிகா எச்சரிக்கை | சிம்புவை அணுகிய சூர்யா 47 படக்குழு | பிளாஷ்பேக்: பாடலாசிரியராக, வசனகர்த்தாவாக கலையுலகின் கவனம் ஈர்த்த இயக்குநர் கே எஸ் கோபாலகிருஷ்ணன் | காமெடி கலந்த க்ரைம் த்ரில்லர் படங்கள்: இந்த வார ஓடிடி வரவுகள்...! | மகேஷ் பாபு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பவன் கல்யாண் பட இயக்குனர் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிளாஷ்பேக்: தமிழ் திரையிசையில் முதல் கானா பாடலை அறிமுகப்படுத்திய “பொம்மலாட்டம்”

09 பிப், 2026 - 10:39 IST
எழுத்தின் அளவு:
Flashback-“Bommalaattam”-introduced-the-first-Gaana-song-in-Tamil-film-music
Advertisement


பேசும் படம் தொடங்கிய காலம் தொட்டு இன்று வரை, நம் தென்னிந்திய திரைப்படங்களில் பாடல்களுக்கு முக்கியத்துவம் தந்து, எண்ணிலடங்கா பாடல்களை படங்களில் இடம்பெறச் செய்து, அந்தப் பாடல்களுக்காகவே பல படங்கள் ரசிகர்களால் திரும்பத் திரும்ப பார்த்து, ரசிக்கப்பட்டு, அவை எல்லாம் வெற்றித் திரைப்படங்களாக மாறிய ஒரு தனிச்சிறப்பு மிக்க வரலாறு நம் தமிழ் திரையிசைக்கு எப்போதும் இருப்பதுண்டு.

கர்நாடக இசை, மேற்கத்திய இசை, நாட்டுப்புற இசை என இசையின் அத்தனை வடிவங்களிலும் பல்லாயிரக் கணக்கான தேனினும் இனிய பாடல்களை வழங்கிய நம் தமிழ் திரையிசை ஜாம்பவான்கள் அரிதாக சில வட்டார இசை வடிவங்களிலும் ஓரிரு பாடல்களைத் தந்ததுண்டு. குறிப்பாக இசையமைப்பாளர் 'தேனிசை தென்றல்' தேவாவின் வருகைக்குப் பின் 'கானா' பாடல்களின் ஆதிக்கம் என்பது நம் தமிழ் திரையிசையில் ஒரு மாற்றத்தை உண்டு பண்ணியது என்றால் அது மிகையன்று.

அந்த வரிசையில் இசையமைப்பாளர் தேவாவின் வருகைக்கு முன்பே, இந்த 'கானா' வகைப் பாடலை தமிழ் திரையிசைக்கு அறிமுகப்படுத்திய பெருமைக்குரிய ஒரு திரைப்படமாக வெளிவந்த திரைப்படம்தான் “பொம்மலாட்டம்”. ஜெய்சங்கர், ஜெயலலிதா நடிப்பில், 1969ம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படத்தை இயக்கியவர் 'முக்தா' வி சீனிவாசன். படத்தின் திரைக்கதை வசனத்தை எழுதி, 'ஜாம்பஜார் ஜக்கு' என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகர் சோ.

“மயக்கத்தை தந்தவர் யாரடி”, “நீ ஆட ஆட அழகு”, “நல்ல நாள் பார்க்கவோ” என இசையமைப்பாளர் வி குமாரின் இசையமைப்பில் பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில், நடிகை மனோரமாவும், நடிகர் சோவும் பங்கு பெறுவது போல் வரும் ஒரு பாடல் காட்சிக்கு மெட்ராஸ் பாஷையை பயன்படுத்தி பாடல் வரிகளை எழுதினால் நன்றாக இருக்கும் என படத்தின் இயக்குநர் 'முக்தா' வி சீனிவாசன் அபிப்ராயப்பட, பாடலாசிரியர் வாலியோ, அது தனக்கு சிரமமாக இருப்பதாக உணர்ந்ததால், எம் எல் கோவிந்த் என்பவரை மெட்ராஸ் பாஷையில், பாடலுக்கான பொருத்தமான வார்த்தைகளை எடுத்து வழங்க பணியமர்த்தப்பட்டு, பின் பாடலை எழுதி முடித்தார் கவிஞர் வாலி.

“வா வாத்தியாரே வூட்டாண்டே நீ வராங்காட்டி நா வுடமாட்டேன், ஜாம்பஜார் ஜக்கு, நா சைதா பேட்ட கொக்கு” என்ற கவிஞர் வாலியின் பாடலுக்கு பின்னணி பாடி சிறப்பித்திருப்பார் நடிகை மனோரமா. 1969ம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படத்தின் இந்தப் பாடல்தான் தமிழ் திரையுலகில் 'கானா' பாடல்களின் வருகைக்கு அடித்தளமிட்ட முதல் பாடலாக அமைந்திருந்தது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
2046ல் என்ன நடக்கும் ? ரஜிஷா விஜயனின் புதிய படம் பதில் சொல்லும்2046ல் என்ன நடக்கும் ? ரஜிஷா விஜயனின் ... கோடிகளில் சம்பளம்... ஆனாலும் மகிழ்ச்சி இல்லை : அனிருத் கோடிகளில் சம்பளம்... ஆனாலும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap