கோர்ட் உத்தரவை மீறி பேட்டி : மன்னிப்பு கேட்ட ரவி மோகன் | சென்னையில் தான் இருக்கிறேன், ஐதராபாத்தில் குடியேறவில்லை : ஐஸ்வர்யா ராஜேஷ் | ரேனிகுண்டா 2 படத்தின் முதல் பார்வை வெளியீடு | சூர்யாவை தொடர்ந்து அர்ஜூனுக்கும் வெற்றி : 50 கோடியை நெருங்கும் பிளாஸ்ட் | மஞ்சும்மல் பாய்ஸ் மாதிரி தமிழகத்தில் பாலன் ஓடுமா? | அரசன் படத்திற்காக 2 மாதங்களாக இரவில் நடக்கும் படப்பிடிப்பு | 'லிங்கம்' வெப் சீரீஸ் 26ம் தேதி வெளியாகிறது | இங்கிலாந்து மன்னரின் 'சர்' பட்டம் பெற்ற ஹாலிவுட் நடிகர் | பிளாஷ்பேக்: உடலால் வாழ்ந்து, உடலால் வீழ்ந்த உசிலைமணி | பிளாஷ்பேக்: முதல் பாகம் மலையாளத்தில், 2ம் பாகம் தமிழில் |

2026ம் ஆண்டு பொங்கலுக்கும், சங்கராந்திக்கும் தமிழ், தெலுங்கு என சுமார் 10 படங்கள் வரை வெளிவந்தன. தமிழில் 'பராசக்தி, வா வாத்தியார், தலைவர் தம்பி தலைமையில்' ஆகிய படங்கள் வெளிவந்தன.
இவற்றில் 'வா வாத்தியார்' படம் இரண்டு வாரங்களில் ஜனவரி 28ம் தேதியே ஓடிடி தளத்தில் வெளியானது. 'பராசக்தி' படம் ஓடிடியில் வெளியிடும் நான்கு வார கணக்குப்படி இன்று வெளியாகி உள்ளது. 'தலைவர் தம்பி தலைமையில்' படத்திற்கான நான்கு வாரம், அடுத்த வாரம் தான் முடிகிறது. எனவே, அப்போது வெளியாகலாம்.
தெலுங்கில் வெளியான படங்களில் 'நரி நரி நந்தும முராரி' படம் பிப்ரவரி 4ம் தேதியும் , பிரபாஸ் நடித்த 'தி ராஜா சாப்' படம் நேற்றும் ஓடிடி தளத்தில் வெளியானது. மற்ற தெலுங்குப் படங்களான சிரஞ்சீவி நடித்த 'மனஷங்கர வரபிரசாத் காரு,', நவீன் பொலிஷெட்டி நடித்த 'அனகனகா ஒக ராஜு', ரவி தேஜா நடித்த 'பர்த மஹாயாயுலகு விக்ஞாபதி' ஆகியவை அடுத்த வாரமும் வெளியாக உள்ளன.
பொங்கலை முன்னிட்டு பெரும் எதிர்பார்ப்பில் வெளியான சில படங்கள் இரண்டு, மூன்று வாரங்களுக்குள்ளாகவே ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இப்படி வருவதால் தான் தியேட்டர்களுக்கு மக்கள் வருவது குறைந்து போகிறது என தியேட்டர்காரர்கள் வருத்தப்படுகிறார்கள்.