பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

தெலுங்கில் முன்னணி நடிகரான பவன் கல்யாண், ஆந்திர மாநில சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று துணை முதல்வராகவும் பொறுப்பில் உள்ளார். தேர்தலுக்கு முன்னதாகவே அவர் நடிப்பில் 'ஹரிஹர வீர மல்லு, ஓஜி, உஸ்தாத் பகத்சிங்' ஆகிய படங்கள் படப்பிடிப்பில் இருந்தது.
துணை முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு பல மாதங்களாக சினிமாவில் நடிப்பதை நிறுத்தி வைத்திருந்தார். பின்னர் தயாரிப்பாளர்களின் நிலையை கருத்தில் கொண்டு 'ஹரிஹர வீர மல்லு', 'ஓஜி','உஸ்தாத் பகத்சிங்' ஆகிய பட பணிகளை முடித்து தந்தார். இவற்றில் ஹரிஹர வீர மல்லு, ஓஜி ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாகின.
உஸ்தாத் பகத் சிங் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஹரிஷ் சங்கர் இயக்கியுள்ளார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். கதாநாயகிகளாக ஸ்ரீலீலா, ராஷி கண்ணா ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். தற்போது இப்படம் வருகிற மார்ச் 26ம் தேதியன்று திரைக்கு வருகிறது என அறிவித்துள்ளனர்.