இனி டாக்டர் ஸ்ரீலீலா | ‛ஓ பட்டர்பிளை' படத்திற்கு ‛மூன்று முடிச்சு' என தலைப்பு வைக்க நினைத்த இயக்குனர் | ரவி மோகனுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது : பாடகி கெனிஷா வெளியிட்ட தகவல் | சிரஞ்சீவியின் ‛விஸ்வாம்பரா' பார்வையாளர்களை திகைக்க வைக்கும் : இயக்குனர் வசிஷ்டா | மருத்துவமனையில் நடிகை விசித்ரா வெளியிட்ட பதிவு | வெங்கடேஷ் படத்தில் இணையும் கதாநாயகிகள் யார் | ரஜினி படத்துடன் மோதுகிறது சூர்யா 47 படம் | சர்வம் டெலுலு எப்படி சர்வம் மாயா ஆனது : இயக்குனர் பகிர்ந்த சுவாரஸ்யம் | இரவில் ரஜினி உடன் பைக் ரைட் : ராதிகா சொன்ன பிளாஷ்பேக்... | 100 ஆண்டுக்கு அப்புறம் தான் ரிலீஸ்; ஆனா இப்பவே படம் 'ரெடி': ஹாலிவுட்டில் புது கூத்து! |

'சீதாராமம்' படம் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமான நடிகையான மிருணாள் தாக்கூர், நடிகர் தனுஷை காதலிப்பதாக கடந்த சில வாரங்களாக செய்திகள் பரவி வருகின்றன. இதற்கு இருவர் தரப்பில் இருந்து வெளிப்படையாக மறுப்பு கூட இதுவரை தெரிவிக்கவில்லை. இந்த நிலையில், ஹிந்தியில் சித்தாந்த் சதுர்வேதியுடன் அவர் நடித்துள்ள 'தோ தீவானே செகர் மெய்ன்' என்ற படம் வருகிற பிப்ரவரி 20ம் தேதி திரைக்கு வருகிறது. இதன் புரமோஷன் நிகழ்ச்சியில், தன்னுடைய கடந்தகால காதல், பிரேக்கப் பற்றி பேசியிருந்தார்.
இந்த நிலையில் அவர் பங்கேற்ற மற்றுமொரு நிகழ்ச்சியில் அவரிடம் 'உங்களை பொறுத்தவரை காதல் என்றால் என்ன?' என்ற கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த மிருணாள், ''காதல் என்பது மிக அழகான உணர்வு. பூமியில் இருக்கும் அனைவருக்கும் அது ஏற்பட வேண்டும். காதல் ஒருவரை சிறந்த மனிதராக மாற்றும் சக்தி கொண்டது. எல்லோருக்கும் அப்படியான காதல் அமைய வேண்டும் என நான் பிரார்த்திக்கிறேன். காதலில் மிக முக்கியமானது ஏற்றுக் கொள்ளுதல்.
சில நேரங்களில் காதலை ஏற்றுக் கொள்வதும், அங்கீகரிப்பதும் சிரமமானதாக இருக்கலாம். காதலுக்கான வரையறைகள் காலத்துக்கு ஏற்ப மாறிக் கொண்டே இருந்தாலும், எப்போதும் காதல் மட்டும் மாறாது. காதலில் இருப்பவர்கள் கொடுப்பவர்களாக இருக்க வேண்டும். அதற்கு ஆண், பெண் என்ற பேதமில்லை. நீங்கள் காதலில் இருந்தால், அவர்களிடம் முழுமையாக சரணடையுங்கள்'' எனக் கூறியுள்ளார்.




