பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

சங்கமித்ரன் ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் அம்மன் ஆர்ட் க்ரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் 'ப்ராமிஸ்'. கதையின் நாயகனாக நடித்து அருண்குமார் சேகரன் இயக்கியுள்ளார். ஒளிப்பதிவாளராக வினோத்குமார் பணியாற்றி உள்ளார்.சரவண தீபன் இசையமைத்துள்ளார்.
கதாநாயகியாக புதுமுகம் நதியா சோமு நடித்துள்ளார். சுஜன், அம்ரிஷ் ,பிரதாப், கோகுல், சுந்தரவேல், ராஜ்குமார், கலைவாணி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
படம் பற்றி இயக்குநர் அருண்குமார் சேகரன் கூறும்போது, "இந்த உலகில் ப்ராமிஸ் என்பது எவ்வளவு மதிப்புள்ளது என்பதைப் பற்றி இந்தப் படத்தில் பேசி இருக்கிறோம். அம்மா மீது வைக்கப்படும் ப்ராமிஸ் மிக மதிப்புள்ளது. உணர்ச்சிகரமானது. எனவே யாரும் அம்மா மீது அப்படி ப்ராமிஸ் செய்ய மாட்டார்கள். கணவன் மனைவிக்குள் காதலர்களுக்குள் இருக்கும் ப்ராமிஸ் என்பது மிகவும் மதிப்புள்ளது என்பதை இந்தப் படத்தில் கூறி இருக்கிறோம். ஒரு கட்டத்தில் அந்த ப்ராமிஸ் உடைக்கப்படும் போது, அந்த நம்பிக்கை சிதையும் போது அந்த வாழ்க்கையைத் தலைகீழாகப் புரட்டிப் போடும் உணர்ச்சிகரமான சம்பவங்கள் நடக்கின்றன. அதிலிருந்து அவர்கள் மீண்டு வந்தார்களா இல்லையா?என்பதே இந்தப் படத்தின் கதை" என்கிறார்.