பொங்கல் விடுமுறை நிறைவு : புதிய படங்களின் நிலவரம்… | 'கைதி 2' : கார்த்தி சொன்னதைச் செய்வாரா லோகேஷ் கனகராஜ் ? | இந்தியாவே எனது வீடு : சர்ச்சைக்கு ஏஆர் ரஹ்மான் விளக்கம் | 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'தளபதி கச்சேரி' | 2025ம் ஆண்டின் கடைசி வெற்றிப் படம் 'சிறை' - 25வது நாளில்… | வெகுளியாகப் பேசிவிட்டேன் : ஜீவா தந்த விளக்கம் | கவின் 9வது படத்தில் இணைந்த சாண்டி! | மீசைய முறுக்கு 2ம் பாகம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | மகாராஜா இரண்டாம் பாகம் உருவாகிறது! | உறவினரை ஹீரோவாக மாற்றி அழகு பார்க்கும் கார்த்திக் சுப்பராஜ்! |

கடந்த பிப்ரவரி மாதம் கன்னட நடிகை ரன்யா ராவ், விமானம் மூலம் அடிக்கடி தங்க கடத்தலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட நிகழ்வு பரபரப்பு ஏற்படுத்தியது. அவரது ஜாமீன் மனுக்கள் தொடர்ந்து நிராகரிகப்பட்டதை தொடர்ந்து தற்போது அவர் சிறையில் இருக்கிறார். தமிழில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான வாகா படத்தில் கதாநாயகியாக நடித்தது இவர்தான். அது மட்டுமல்ல இவர் கர்நாடக டிஜிபி ஆன ராமச்சந்திரா ராவ் என்பவரின் வளர்ப்பு மகளும் கூட.
இவர் இந்த தங்க கடலுக்கு தனது வளர்ப்பு தந்தையின் செல்வாக்கையும் அதிகாரத்தையும் பயன்படுத்தினார் என்று குற்றம் சாட்டப்பட்டது. இதனால் டிஜிபி ராமச்சந்திர ராவ் அவரது பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு கட்டாய விடுமுறையில் செல்ல பணிக்கப்பட்டார். இந்த நிலையில் தற்போது அவருக்கு மீண்டும் டிஜிபி பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. குடியுரிமைகள் அமலாக்க துறையில் இவர் டிஜிபியாக நியமிக்கப்பட்டு அதற்கான அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.