விஜய்சேதுபதியா... துருவ் விக்ரமா... மணிரத்னம் சாய்ஸ் யார்? | விஷால் இயக்கி நடிக்கும் 'மகுடம்' படப்பிடிப்பு நிறைவு | ரஜினி படத்தை தனுஷ் இயக்குவாரா? | ப்ரண்ட்ஸ் ரீ ரிலீஸ் விழா : படக்குழு ஆப்சென்ட் | 'வாரணாசி' முன்னோட்ட வரவேற்பு: ராஜமவுலியின் நன்றி | மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த், நாகார்ஜுனா, சவுபின் ஷாகிர், சத்யராஜ், உபேந்திரா, ஸ்ருதிஹாசன் என மல்டிஸ்டார் கூட்டணியில் அடுத்த வாரம் வெளியாக உள்ள படம் 'கூலி'. இப்படத்திற்கான வெளிநாட்டு முன்பதிவு ஏற்கெனவே ஆரம்பமாகி நடந்து வருகிறது.
வெளிநாடுகளில் இப்படம் “ஐமேக்ஸ், டிபாக்ஸ், 4டிஎக்ஸ், டால்பி' ஆகிய திரை தொழில்நுட்பங்களில் திரையிடப்படமாட்டாது, 'பிஎல்எப்' எனப்படும் பிரிமியம் லார்ஸ் பார்மேட் வடிவில் மட்டுமே திரையிடப்படும், என அமெரிக்காவில் இப்படத்தை வெளியிடும் பிரத்யங்கரா சினிமாஸ் நிறுவனம் ஏற்கெனவே அறிவித்திருந்தது.
ஹிருத்திக் ரோஷன், ஜுனியர் என்டிஆர் நடித்து அதே தினத்தில் வெளியாகும் ஹிந்திப் படமான 'வார் 2' தயாரிப்பு நிறுவனம் மேற்கண்ட நிறுவனங்களுடன் பிரத்தியேகமான ஒப்பந்தம் செய்து கொண்டதே அதற்குக் காரணம்.
இந்தியாவிலும் இரண்டு வாரங்களுக்கு இங்குள்ள அனைத்து ஐமேக்ஸ் தியேட்டர்களிலும் 'வார் 2' படத்தைத் திரையிடும் ஒப்பந்தத்தையும் செய்துள்ளார்களாம். அதனால், இரண்டு வாரங்களுக்குப் பிறகே 'கூலி' படத்தை இந்தியாவில் ஐமேக்ஸ் தியேட்டர்களில் பார்க்க முடியும் என்கிறார்கள்.
பிரத்யேகமான ஒப்பந்தம் என்ற பெயரில் இப்படி மொத்தமாக வேறு படத்தைத் திரையிட முடியாமல் செய்வதற்கு ரசிகர்கள் வருத்தம் அடைந்துள்ளனர்.
ஆன்லைனில் முன்பதிவு ஆரம்பமான பிறகுதான் எந்தெந்த வடிவில் இந்தியாவில் திரையிடப்படும் என்பது ரசிகர்களுக்குத் தெரிய வரும்.