நீண்ட இடைவெளிக்குப் பின் டிவி பக்கம் வந்த ரோஜா | சென்னையில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட 2 தியேட்டர்கள் | தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே…. | இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 |

ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படத்தில் பாடல் வெளியீட்டு விழா எப்போது, அந்த விழா நடக்குமா? இல்லையா என்பது ரசிகர்களின் கேள்வியாக இருக்கிறது. காரணம், இந்த மாதம் இறுதியில் பாடல் வெளியீட்டு விழா நடக்கும் என்று கூறப்பட்டது. ஆனால், சில காரணங்களால் அது நடக்கவில்லை. தனது இசை நிகழ்ச்சி வேலைகளில் அனிருத் பிஸியாக இருப்பதால் விழா நடக்கவில்லை என்றார்கள். இப்போது அனிருத் விழா ரத்தாகிவிட்டது. ஆனாலும், பாடல் வெளியீட்டு விழாவை நடத்தாமல் இருப்பது சரியா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இப்போதைய நிலரவப்படி ஆகஸ்ட் 2ம் தேதி கூலி பாடல் வெளியீட்டுவிழா பிரம்மாண்டமாக நடக்கிறது. அதில் ரஜினிகாந்த் மற்றும் படத்தில் நடித்த சத்யராஜ், நாகர்ஜூனா, உபேந்திரா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் கலந்து கொள்கிறார்கள். ரஜினியின் 50வது ஆண்டு சினிமா பயணத்தில் இந்த விழா நடப்பதால் பிரமாண்டமாக நடக்க உள்ளது. ரஜினியும் பல முக்கியமான விஷயங்களை பேசப்போகிறார் என்கிறார்கள்.
மோனிகா பாடல் மூலம் மஞ்சும்மேல் பாய்ஸ் சவுபின் ஷாகீர் இன்னும் பிரபலமாகிவிட்டதால் அவர் கண்டிப்பாக விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று படக்குழு விரும்புகிறதாம். முதன்முறையாக ரஜினிகாந்த்துடன் நடித்துள்ளார் கமல் மகள் ஸ்ருதிஹாசன். இந்த விழாவுக்கு கமல்ஹாசன் வருவாரா என்பது பலரின் ஆர்வமாக இருக்கிறது.