இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார் | ஹைதராபாத்தில் அனிருத் நடத்தும் 'கூலி' இசை நிகழ்ச்சி! | ரியல் பிரபாஸூடன் நடித்த நிதி அகர்வால்! | ஜீவாவின் 46வது படத்தை இயக்கும் கே.ஜி.பாலசுப்பிரமணி! | ஆகஸ்ட் 29ல் தனது பிறந்த நாளில் குட் நியூஸ் வெளியிடும் நடிகர் விஷால்! | கமலின் 237வது படத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்! | நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் அதர்வாவின் தணல்! | நாளை ரீரிலீஸ் ஆகும் பாட்ஷா படம்! | இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம் | ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! |
தமிழில் அம்மா அப்பா செல்லம், வீரம், அண்ணாத்த உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பாலா. இவர் இயக்குனர் சிவாவின் உடன் பிறந்த சகோதரர். அதேசமயம் மலையாள திரையுலகில் செட்டில் ஆகி படங்களில் நடித்து வருகிறார். ஆனால் அடுத்தடுத்து காதல் திருமணம், பின்னர் விவாகரத்து என்கிற செய்திகள் மூலம் தான் இவர் மீடியாக்களில் பரபரப்பாக தொடர்ந்து அடிபட்டு வருகிறார். அந்த வகையில் தனது இரண்டாவது திருமணம் முடிவுக்கு பிறகு மூன்றாவதாக டாக்டர் எலிசபெத் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவருடனும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இரண்டு வருடங்களில் பிரிந்து, தற்போது நான்காவதாக தனது உறவுக்கார பெண்ணான கோகிலா என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார் பாலா.
அதே சமயம் அவ்வப்போது சோசியல் மீடியாவில் பாலாவிற்கும் அவரது மூன்றாவது மனைவியான டாக்டர் எலிசபெத்திற்கும் வார்த்தை போர் நடைபெற்று வந்தது. ஒரு கட்டத்தில் எலிசபெத், நடிகர் பாலா தன்னை மிரட்டுவதாகவும் குடும்ப வாழ்க்கை நடத்திய போது தன்னை அடித்து உதைத்து துன்புறுத்தியதாகவும் கூறி கடத்த சில மாதங்களுக்கு முன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார். இந்த நிலையில் தற்போது மருத்துவமனையில் இருந்தபடி ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் எலிசபெத்.
அதில் நீதிமன்றத்தின் வழக்கு தொடரந்தும் கேரள முதல்வரிடம் சென்று முறையிட்டும் கூட என் பிரச்சனை இன்னும் தீரவில்லை. நடிகர் பாலா என் மீது தொடர்ந்த தாக்குதல்கள், தற்போது விடுக்கும் மிரட்டல்கள், சோசியல் மீடியாவில் பரப்பும் அவதூறுகள் என எல்லாவற்றையும் ஆதாரங்களுடன் காவல் நிலையத்தில் புகார் அளித்தும், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தும் இருக்கிறேன். ஆனால் அவர் நீதிமன்றத்தில் சொன்ன தேதியில் ஆஜர் ஆகாமல் தவிர்த்து வருகிறார் பாலா கடந்த முறை ஆஜரான போது அவரது வழக்கறிஞர் நடிகர் பாலா பொருளாதார ரீதியாக சிரமத்தில் இருப்பதாக கூறினார். இதே பாலா தான் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனக்கு 250 கோடி மதிப்புள்ள சொத்து இருப்பதாக வெளிப்படையாக கூறியிருந்தார்.
பொதுவாக பெண்கள் வெளியே வந்து தங்கள் பிரச்சனையை உரக்கச் சொன்னால் நீதி கிடைக்கும் என்று சொல்வார்கள். அதை நம்பித்தான் இதில் இறங்கினேன். ஆனால் அது எவ்வளவு தவறு என்பது இப்போதுதான் தெரிகிறது. ஒரு கட்டத்திற்கு மேல் என்ன செய்வது என்று தெரியாமல் தான் இந்த நிலைக்கு நான் ஆளாகி இருக்கிறேன். ஒருவேளை இந்த வீடியோ வெளியானால் என்ன நிகழும் என்று தெரியாது. அதை பார்ப்பதற்கு நான் உயிரோடு இருப்பனா என்றும் தெரியாது. அப்படி எனக்கு ஏதேனும் நிகழ்ந்தால் அதற்கு நடிகர் பாலாவும் அவரது குடும்பத்தினரும் தான் முழு பொறுப்பு என்று கூறியுள்ளார். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இந்த வீடியோவை வெளியிட்டு இருப்பதன் மூலம் மலையாளத் திரையுலகில் ஒரு பரபரப்பு ஏற்பட்டுள்ளதுடன் டாக்டர் எலிசபெத் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாரா என்கிற சந்தேகமும் தற்போது எழுந்துள்ளது. போலீஸ் இது குறித்து தற்போது விசாரித்து வருகின்றனர்.