தம்பி பவன் கல்யாணுக்கு நன்றி சொன்ன சிரஞ்சீவி | சினிமாவில் போக்குவரத்து போலீஸ், நிஜத்தில் போக்குவரத்து அமைச்சர் | ‛ஐ யம் கேம்' படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது | மற்றுமொரு வெற்றி, கடவுளுக்கு நன்றி சொன்ன திரிஷா | ‛திரிஷ்யம் 3' - முதல் காட்சியிலேயே தவித்த ரசிகர்கள் | ஆகஸ்ட் மாதம் துவங்கும் மணிரத்னம், விஜய் சேதுபதி படம் | திகில் முதல் காமெடி வரை.... வரிசைக் கட்டும் ஓடிடி ரிலீஸ்...! | ‛ஏழு கடல் ஏழு மலை' படத்தில் ஏ.ஐ தொழில்நுட்பம் | அர்ஜுன் தாஸின் ‛கான் சிட்டி' ரிலீஸ் தேதி இதோ | ராமாயணா படத்தில் சாய் பல்லவி குரலை வேண்டாம் என்ற இயக்குனர் |

இசைத் துறையில் உள்ள பாடகர்கள், இசை அமைப்பாளர்கள் நடிகர்களாகவும், இயக்குனர்களாகவும் மாறிக் கொண்டிருந்த நேரத்தில் பாடகர் மலேசிய வாசுதேவனும் இயக்குனர் ஆனார். அவர் இயக்கிய ஒரே படம் 'நீ சிரித்தால் தீபாவளி'.
இந்த படத்தில் சிவகுமார், ஹரிஷ் குமார், டெய்சி சோனியா, நிழல்கள் ரவி, ஜனகராஜ் உள்ளிட்ட பலர் நடித்தனர். இளையராஜா இசை அமைத்தார்.
படத்தில் அம்பிகாபதி, அமராவதி ரேன்ஞ்சுக்கு ஒரு காதல் கதை சொன்னார் வாசுதேவன், ஆனால் படம் தோல்வி அடைந்தது. உருக உருக சொன்ன காதலும், அளவிற்கு அதிகமான பாடல்களும் படத்தின் தோல்விக்கு காரணம் என்பார்கள். இந்த படத்தின் தோல்வியால் இதன்பிறகு மலேசியா வாசுதேவன் படங்கள் எதையும் இயக்கவில்லை.




