தமிழுக்கு வரும் சப்தமி கவுடா | டிக்கெட் முன்பதிவில் 1.5 கோடி வசூலித்த மங்காத்தா | பவன் கல்யாண் ஒரு நாள் இந்தியாவின் பிரதமராவார் : சொல்கிறார் நடிகை நித்தி அகர்வால் | அருள்நிதி கையில் 3 படங்கள் : இந்த ஆண்டு அடுத்தடுத்து ரிலீஸ் | லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படப்பிடிப்பு நிறைவு | ஜனநாயகன் சென்சார் விவகாரம் : இனியாவது வாயை திறப்பாரா விஜய்? | சூரி சொன்ன 'மண்டாடி' கதை | தந்தைக்கு எதிராக வெறுப்பு பேச்சு : கதீஜா ரஹ்மான் கோபம் | ஒரே நேரத்தில் தயாராகும் 34 படங்கள் | பிளாஷ்பேக் : 5 நாளில் படமாக்கப்பட்ட 'பாசம் ஒரு வேசம்' |

ஆதித்ய வர்மா, மகான் படங்களைத் தொடர்ந்து தற்போது மாரி செல்வராஜ் இயக்கும் பைசன் என்ற படத்தில் நடித்துள்ளார் துருவ் விக்ரம். அவருக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். மேலும் பசுபதி, ரஜிஷா விஜயன், கலையரசன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இப்படம் வருகிற அக்டோபர் 17ம் தேதி திரைக்கு வருகிறது.
இந்த நிலையில் ஹிந்தியில் 2023ம் ஆண்டு வெளியான கில் என்ற படத்தின் தமிழ் ரீமேக்கில் துருவ் விக்ரமை நடிக்க வைக்க தற்போது பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அதிரடியான ஆக்ஷன் கதையில் உருவான இந்த கில் படத்தை, நிகில் நாகேஷ் பட் என்பவர் இயக்கினார். லஸ்யா லால்வாணி, தன்யா மணித்லா, ஆசிஷ் வித்யார்த்தி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள்.
பைசன் படம் திரைக்கு வருவதற்கு முன்பே இந்த படம் தொடங்கப்பட்டு விடும் என்றும் கூறப்படுகிறது. மேலும் துருவ் விக்ரம் நடித்த முதல் படமான ஆதித்ய வர்மா படமும் அர்ஜுன் ரெட்டி தெலுங்கு ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.




