திருமணத்திற்கு பிறகு மும்பையில் குடியேறிய சமந்தா! | 'ஜனநாயகன்' டிக்கெட் முன்பதிவு தொடங்கியது! ஜெர்மனியில் 5.5 லட்சம் வரை வசூல்!! | 'தி கேர்ள்ப்ரெண்ட்' பட முழு ஸ்கிரிப்ட்டையும் ஆன்லைனில் அப்லோடு செய்த இயக்குனர் | சென்சார் கெடுபிடி காட்டிய இளம் நடிகரின் பட ரிலீசுக்கு உயர்நீதிமன்றம் கிரீன் சிக்னல் | மலேசியாவில் அஜித்தை சந்தித்த ஸ்ரீ லீலா | சின்னத்திரை நடிகர் சங்கத்தில் பெண்கள் அணி: சங்க தலைவர் பரத் தகவல் | நான் சொல்வதை அவன் கேட்கமாட்டான்: கூல் சுரேஷ் குறித்து சந்தானம் | தெலுங்கு சினிமாவில் ஒற்றுமை இல்லை! - தமன் ஆதங்கம் | 'மனா சங்கரா வரபிரசாந்த் காரு' படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு! | பிளாஷ்பேக்: 'நடிப்பிசைப் புலவர்' கே ஆர் ராமசாமியை நாடறியும் நடிகனாக்கிய “பூம்பாவை” |

மலையாள திரையுலகில் இயக்குனராக நுழைந்து கோதா, மின்னல் முரளி உள்ளிட்ட படங்களால் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றவர் பஷில் ஜோசப். அதேசமயம் சில படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து சமீபவருடங்களாக கதாநாயகனாக நடிக்கும் அளவிற்கு பிஸியான நடிகராக வளர்ந்து விட்டார் பஷில் ஜோசப். கடந்த வருடம் இவரது நடிப்பில் வெளியான குருவாயூர் அம்பல நடையில், சூட்சும தர்ஷினி, கிஷ்கிந்தா காண்டம், இந்த வருடம் வெளியான பொன் மான் உள்ளிட்ட படங்கள் வரவேற்பை பெற்றன. இதனை தொடர்ந்து அடுத்ததாக தற்போது இவர் நடித்துள்ள மரண மாஸ் திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது.
ஆனால் இந்த படம் சவுதி அரேபியா குவைத் உள்ளிட்ட அரபு நாடுகளில் வெளியாக தடை விதிக்கப்பட்டுள்ளது.. காரணம் இந்த படத்தில் ஒரு திருநங்கை கதாபாத்திரம் இடம்பெற்றுள்ளது. இதனால் அரபு நாடுகளுக்கான சென்சாருக்கு அனுப்பப்பட்ட போது திருநங்கை சம்பந்தப்பட்ட காட்சிகளை நீக்கினால் படத்தை திரையிடலாம் என சொல்லப்பட்டது. ஆனால் படத்தில் ஒரு முக்கிய அம்சமாக அந்த திருநங்கை கதாபாத்திரம் இடம் பெற்றிருப்பதால் அந்த காட்சிகளை நீக்க படக்குழுவினர் தயக்கம் காட்டியுள்ளனர். அதனால் இன்று அரபு நாடுகளில் இந்த படம் வெளியாகவில்லை. இந்த படத்தை அறிமுக இயக்குனர் சிவப்பிரசாத் இயக்கியுள்ளார்.




