''நான் அதிர்ஷ்டசாலி'': நல்ல நண்பராக மணிகண்டன் கிடைத்த மகிழ்ச்சியில் ஷான்வி | 'கேம் சேஞ்சர்'--ல் விட்டதை 'பெத்தி'யில் பிடித்த ராம் சரண் | தயாரிப்பாளர் எம்.ராமநாதன் காலமானார் | குட் பேட் அக்லி - எந்த விழாவும் இல்லை, எந்த சந்திப்பும் இல்லை | ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் வந்துள்ள ஹரி | மாரீசன் படத்தில் கோவை சரளா | உங்கள் ஊகங்களை நிறுத்துங்கள்: ரசிகருக்கு அட்வைஸ் செய்த மாளவிகா மோகனன் | 'சந்தோஷ்' படத்தை வெளியில் திரையிடுவேன் : பா ரஞ்சித் அடாவடி | பிளாஷ்பேக்: பைந்தமிழ் கற்பதில் தாமதம்; பட வாய்ப்பை இழந்த நடிகை பண்டரிபாய் | மே 16ல் ரீ-ரிலீஸாகும் ஆட்டோகிராப் |
ஒரு படம் வெளிவருவதற்கு முன்பே அந்தப் படத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க படம் சம்பந்தப்பட்டவர்கள் என்னென்னமோ செய்கிறார்கள். சமீபத்தில் வெளியான 'வீர தீர சூரன் 2' படத்திற்காக அதன் நாயகன் விக்ரம், நாயகி துஷாரா உள்ளிட்டோர் கல்லூரி விழா, தமிழகத்தில் மட்டுமல்லாது ஆந்திரா, கர்நாடகா, கேரளா என பல ஊர்களுக்கும் சென்றார்கள். படம் வெளியான பின்பும் கூட பல தியேட்டர்களுக்குச் சென்று படத்தைத் தாங்கிப் பிடித்தார்கள்.
ஆனால், அஜித் படம் வந்தால் அவை எதுவுமே நடக்காது. தான் நடிக்கும் படங்களின் எந்தவிதமான நிகழ்ச்சிகளிலும் அஜித் கலந்து கொள்ள மாட்டார். பல வருடங்களாக அதை ஒரு கொள்கையாகவே வைத்துள்ளார். இந்தக் காலத்தில் அந்த கொள்கை எடுபடுமா என்பது சந்தேகமே. அது அஜித் நடித்து வெளிவந்த 'விடாமுயற்சி' படத்திலேயே தெரிந்தது.
இந்நிலையில் இன்னும் சில தினங்களில் வெளியாக உள்ள 'குட் பேட் அக்லி' படத்திற்காக இதுவரை எந்த ஒரு நிகழ்ச்சியும், பத்திரிகையாளர் சந்திப்பும் நடக்கவில்லை. தமிழில் மட்டுமல்லாது, தெலுங்கு, ஹிந்தியிலும் இதே நிலைதான்.
தமிழிலாவது சில தினங்களுக்கு முன்பு டிரைலரை வெளியிட்டார்கள். தெலுங்கு, ஹிந்தி டிரைலர்களை இன்றுதான் அடுத்தடுத்து வெளியிட்டுள்ளார்கள். தமிழில் தியேட்டர்கள் கிடைக்கும் அளவிற்கு தெலுங்கு, ஹிந்தியில் கிடைக்குமா என்பது தெரியவில்லை, என்பதுதான் இப்போதைய கள நிலவரம்.