''நான் அதிர்ஷ்டசாலி'': நல்ல நண்பராக மணிகண்டன் கிடைத்த மகிழ்ச்சியில் ஷான்வி | 'கேம் சேஞ்சர்'--ல் விட்டதை 'பெத்தி'யில் பிடித்த ராம் சரண் | தயாரிப்பாளர் எம்.ராமநாதன் காலமானார் | குட் பேட் அக்லி - எந்த விழாவும் இல்லை, எந்த சந்திப்பும் இல்லை | ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் வந்துள்ள ஹரி | மாரீசன் படத்தில் கோவை சரளா | உங்கள் ஊகங்களை நிறுத்துங்கள்: ரசிகருக்கு அட்வைஸ் செய்த மாளவிகா மோகனன் | 'சந்தோஷ்' படத்தை வெளியில் திரையிடுவேன் : பா ரஞ்சித் அடாவடி | பிளாஷ்பேக்: பைந்தமிழ் கற்பதில் தாமதம்; பட வாய்ப்பை இழந்த நடிகை பண்டரிபாய் | மே 16ல் ரீ-ரிலீஸாகும் ஆட்டோகிராப் |
தமிழ் சினிமாவில் உள்ள முக்கிய மசாலா இயக்குனர்களில் ஒருவர் ஹரி. அவர் 'கேமரா' இல்லாமல் கூட சினிமா எடுப்பார், ஆனால், 'அருவா' இல்லாமல் படம் எடுக்க மாட்டார் என்ற பெயரைப் பெற்றவர்.
பிரசாந்த், சிம்ரன், வடிவேலு, ஊர்வசி மற்றும் பலர் நடித்த 'தமிழ்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். 2002ல் வெளிவந்த தனது முதல் படத்திலேயே நாயகனை 'அருவா' தூக்கச் செய்தவர் ஹரி. அப்படம் வெற்றிப் படமாகவும் அமைந்தது.
தொடர்ந்து விக்ரம், சிம்பு, சரத்குமார், சூர்யா, விஷால், தனுஷ், அருண் விஜய், பரத் ஆகிய நடிகர்களை வைத்து படங்களை இயக்கி உள்ளார். அவர்களில் விக்ரம், சூர்யா, விஷால் ஆகியோருடன் மட்டுமே மீண்டும் இணைந்து படங்களை இயக்கியுள்ளார்.
'சாமி, ஐயா, சிங்கம்' ஆகிய படங்கள் ஹரியின் இயக்கத்தில் கமர்ஷியலாக பெரிய வெற்றி பெற்ற படங்கள். ஹரி இயக்கி விஷால் நடித்து கடந்த வருடம் வெளிவந்த 'ரத்னம்' படம் படுதோல்வியை சந்தித்தது.
இந்நிலையில் 23 வருடங்களுக்குப் பிறகு தனது முதல் பட நாயகனாக பிரசாந்த் உடன் மீண்டும் இணைந்துள்ளார் ஹரி. பிரசாந்தின் 55வது படமாக உருவாக உள்ள அப்படத்தின் அறிவிப்பை நேற்று வெளியிட்டார்கள்.
தமிழ் சினிமாவில் 90, 2000 கால கட்டங்களில் அறிமுகமான இயக்குனர்களில் சுந்தர் சி, ஹரி உள்ளிட்ட ஒரு சிலரே தொடர்ந்து இத்தனை வருடங்களாக படங்களை இயக்கி வருகிறார்கள். மற்றவர்களின் பயணங்கள் தோல்விகளால் தடைபட்டுவிட்டன.