மிருணாள் தாகூரை இயக்கும் தனுஷ் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே சுப்ரமணியத்தை நடிகராக்கிப் பார்த்த “அனந்தசயனம்” | ஹீரோவாக நடிக்கப் போகிறாரா சாய் அபயங்கர் | வெங்கடேஷ் உடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ் | மே 1 பிறந்தநாளில் அஜித் 64 அறிவிப்பு வருமா ? | ராமதாஸ் பயோபிக் 'அய்யா' கைவிடப்பட்டதா? | தமிழகத்தின் முதல் டால்பி தியேட்டரைத் திறந்து வைத்த கமல்ஹாசன் | 2வது முறையாக பாலகிருஷ்ணா உடன் இணையும் காஜல் அகர்வால் | 'பெத்தி' படத்தில் சம்யுக்தா | 29 படத்தின் ஓடிடி உரிமையை கைபற்றிய நெட்பிளிக்ஸ் |

‛ஜவான்' படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு அட்லி இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்தில் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிக்கின்றார். புஷ்பா 2 படத்திற்கு பிறகு அல்லு அர்ஜுன் மீதான எதிர்பார்ப்பு இன்னும் கூடுதலாக உள்ளது.
அல்லு அர்ஜுன், அட்லி கூட்டணியில் உருவாகும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பதாக ஏற்கனவே தகவல்கள் கூறப்பட்டது. தற்போது இதற்கான முன் தயாரிப்பு பணிகளும் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க பிரியங்கா சோப்ராவை ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், பிரியங்கா சோப்ரா இப்போது ராஜமவுலி, மகேஷ் பாபு கூட்டணியில் உருவாகி வரும் புதிய படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது .