சூர்யாவின் ‛விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' டீசர் வெளியீடு | சிம்புவுக்கு ஜோடியாகும் மமிதா பைஜு | சென்னையில் நாளை ஜனநாயகன் மறு தணிக்கை நடக்கிறது | பவன் கல்யாணை பாராட்டும் ஸ்ரீலீலா | 'மாத்ருபூமி' ஆக மாறிய 'பேட்டில் ஆப் கல்வான்' | முன்பதிவில் 120 கோடி வசூல் கடந்த 'துரந்தர் 2' | கைவசம் பல படங்கள் : வெற்றிக்காக ஏங்கும் ஜெய் | அரசியலுக்கு வருவாரா திரிஷா? | அஜித் இயக்குனர்கள் ரெடி : ஆனா தயாரிப்பாளர் எங்கே | ஆயிரம் நடன கலைஞர்களுடன் உருவான பிரமாண்ட பக்தி பாடல் |

விடுதலை 2 படத்திற்கு பிறகு ஏஸ், டிரெயின் மற்றும் பாண்டிராஜ் இயக்கும் படங்களில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. இதில், ஆறுமுக குமார் இயக்கத்தில் அவர் நடித்துள்ள ஏஸ் படத்தில் அவருடன் ருக்மிணி வசந்த், யோகி பாபு, பப்லு பிருத்விராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். இதில் இடம் பெற்றுள்ள உருகுது உருகுது... என்று தொடங்கும் மெலடி பாடல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த பாடலை தாமரை எழுதியிருக்கிறார். கபில் கபிலன், ஸ்ரேயா கோஷல் இருவரும் இணைந்து பாடி உள்ளனர்.
விஜய் சேதுபதி - ருக்மிணி வசந்த் இருவரும் இணைந்து நடித்துள்ள இந்த காதல் பாடலில் அவர்களது கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க்கவுட்டாகி இருக்கிறது. அந்த வகையில், திரிஷாவுடன் நடித்த 96 படத்திற்கு பிறகு இந்த படத்திலும் முழு காதல் கதையில் நடித்துள்ளார் விஜய் சேதுபதி. தற்போது இந்த உருகுதே பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.