'கிங்ஸ்டன்' நம்ம ஊரு 'ஹாரிபார்ட்டர்' : ஜி.வி.பிரகாஷ் | பிளாஷ்பேக் : மதுரை தமிழ் பேச முடியாமல் பாரதிராஜா பட வாய்ப்பை இழந்த வசந்த் | பிளாஷ்பேக் : நடிகையான சர்க்கஸ் கலைஞர் | கிரிப்டோ கரன்சி மோசடி : காஜல், தமன்னாவுக்கு சம்மன் | முன்னணி ஹாலிவுட் நடிகர், நடிகை மரணம் | முருகதாஸ், சல்மானின் ‛சிக்கந்தர்' பட டீசர் வெளியானது | சப்தம் படத்தின் காலை காட்சி வெளியாகவில்லை | லூசிபர் எழுப்பிய கேள்விகளுக்கு எம்புரான் விடை சொல்லும் : பிரித்விராஜ் | 'கூலி' 1000 கோடி வசூலிக்கும் : சந்தீப் கிஷன் | கரண் ஜோஹர் தயாரிப்பில் படம் இயக்கும் மார்கோ இயக்குனர் |
கவுதம் கார்த்திக் நடிப்பில் 'ரங்கூன்' என்ற படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி, அதையடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் 'அமரன்' படத்தை இயக்கினார். இந்த படம் 300 கோடிக்கு மேல் வசூலித்தது. இந்த நிலையில் அடுத்தபடியாக அவர் ஹிந்தி படம் இயக்கப் போவதாக செய்திகள் வெளியாகி வந்த நிலையில், தற்போது தனுஷின் 55வது படத்தை அடுத்து தான் இயக்குவதாக அறிவித்துள்ளார் ராஜ்குமார் பெரியசாமி. தனுசுடன் தான் எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படத்தையும் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
தனுஷ் உடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படத்தின் பின்னணியில் தனுஷின் 55வது படத்திற்கான பூஜை நடத்தப்பட்ட காட்சிகள் இடம் பெற்றுள்ளது. மேலும், மகாசிவராத்திரியில் சிவபெருமானின் அருளைப் பெற்று அனைவரும் அமைதியுடனும் பாசிட்டிவ் எனர்ஜுயுடனும் இருக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன். நற்றுணையாவது நமச்சிவாயவே என்றும் அவர் பதிவிட்டுள்ளார். அடுத்தபடியாக இந்த படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் மற்றும் நடிகர் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என்று தெரிகிறது.