'எல் 2 எம்புரான்' படத்தின் பட்ஜெட் இவ்வளவுதானா ? | அஜித், தனுஷ் கூட்டணியை உறுதி செய்த தயாரிப்பாளர்! | சல்மான்கான் சொன்ன கதைக்கு மறுப்பு தெரிவித்து ஏ.ஆர். முருகதாஸ்! | தனுஷ், விக்னேஷ் ராஜா படத்தின் புதிய அப்டேட்! | பாவனாவின் வருஷம் 14! | முதல் பாகத்தில் இறந்தேன்.. 2ம் பாகத்தில் நடித்துள்ளேன் ; எம்புரான் நடிகர் வைக்கும் டுவிஸ்ட் | 15 கோடி கேட்கும் ரவுடி பேபி | ‛கட் அண்டு ரைட்'டாக பேசும் நடிகை | 'இன்ஸ்டன்ட் ஹிட்' ஆன 'ரெட்ரோ' கனிமா….. | 'மதராஸி' படப்பிடிப்பு எப்போது முடியும்? |
ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கிய ஜவான் படம் ஆயிரம் கோடிக்கு மேல் வசூலித்தது. அதையடுத்து தெறி ஹிந்தி ரீமைக்கை பேபி ஜான் என்ற பெயரில் தயாரித்து, தோல்வி அடைந்தார் அட்லி. இந்த நிலையில் அடுத்தபடியாக சல்மான்கான் நடிப்பில் தனது அடுத்த படத்தை அவர் இயக்கப் போவதாகவும், அந்த படத்தில் கமல் அல்லது ரஜினியை முக்கியம் வேடத்தில் நடிக்க வைக்க திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வந்தன.
ஆனால் தற்போது புஷ்பா-2 படம் திரைக்கு வந்து வெற்றி பெற்றுள்ள நிலையில், அடுத்தபடியாக அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தை அட்லி இயக்கப் போவதாக ஒரு புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. 400 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பான் இந்தியா படமாக உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஜவான் வெளியான நேரத்தில் அல்லு அர்ஜூனை சந்தித்து அட்லி ஒரு கதை சொல்லி இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.