சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன், பகத் பாசில், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிப்பில் கடந்த மாதம் டிசம்பர் 5ம் தேதி பான் இந்தியா படமாக வெளியான படம் 'புஷ்பா 2'. 1800 கோடிக்கும் அதிமாக வசூலித்த இந்தப் படத்தின் ஓடிடி வெளியீட்டை 60 நாட்களுக்குப் பிறகே செய்வோம் என தெரிவித்திருந்தார்கள்.
இந்நிலையில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளம் இந்தப் படத்தை விரைவில் வெளியிடுகிறோம் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் நாளை அல்லது நாளை மறுநாள் இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், ஹிந்தி வெளியீடு குறித்த அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
தியேட்டர்களில் முதலில் வெளியான 3 மணி நேரம் 20 நிமிடப் படத்தை வெளியிடாமல் பின்னர் சேர்க்கப்பட்ட கூடுதலான 20 நிமிடத்தையும் சேர்த்து 3 மணி நேர 40 நிமிடப் படமாக ஓடிடியில் வெளியிட உள்ளார்கள்.
இப்படத்தின் அனைத்து மொழி ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் 275 கோடி கொடுத்து வாங்கியதாக சொல்லப்படுகிறது. இந்திய ஓடிடி வரலாற்றில் இந்தப் படம் புதிய சாதனையைப் படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.