திருமணத்திற்கு பிறகு கவர்ச்சியாக நடிப்பதில் தவறில்லை : ரகுல் ப்ரீத் சிங் | சுமாரான வரவேற்பில் அனுஷ்காவின் 'காட்டி' | புகழ் படம் வந்ததே தெரியாது, பாலா படம் வந்தது தெரிகிறது…!! | மீசைய முறுக்கு 2 நடிக்க மறுத்தது ஏன்? : தேவா விளக்கம் | குறைந்த காட்சிகளுடன் 4வது வாரத்தில் 'கூலி' | அக்., 2ல் ஓடிடியில் வெளியாகும் ‛தி கேம்' வெப் தொடர் | நிவின்பாலிக்கு தமிழில் ரசிகர்கள் கிடைப்பார்களா? | சம்பளம் வாங்காமல் நடிப்பார் ஜி.வி.பிரகாஷ் | விஷால் திருமணத்துக்கு செல்வாரா மிஷ்கின் | எட்டு நாளில் 120 கோடி வசூலித்த லோகா சாப்டர் 1 சந்திரா |
யுவர் பேக்கர்ஸ் புரொடக்ஷன் மற்றும் காவியம் ஸ்டூடியோஸ் சார்பில் கிருஷ்ண ராஜு தயாரித்து நடிக்கும் படம் 'மனிதம்' ஜே புருனோ சாவியோ இயக்குகிறார். பரணி செல்வம் ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்ரீகாந்த் தேவா இசை அமைக்கிறார். மதுநிகா ராஜலக்ஷ்மி முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
படம் பற்றி இயக்குனர் புரூனோ சாவியோ கூறும்போது "புதுச்சேரி பின்னணியில் முழுக்க புதுச்சேரி கலைஞர்கள் நடிக்கும் முதல் படம் உண்மையான உறவு, நட்புகள் யார் என்பதை 'மனிதம்' வெளிச்சம் போட்டு காட்டுகிறது. கதையின் நாயகனுக்கு யார் நல்லவர்கள், யார் கெட்டவர்கள் என்பது எந்த தருணத்தில் எப்படி புரிகிறது என்பது படத்தின் மையக்கரு. இதை சுவாரசியமான முறையில் திரையில் வெளிப்படுத்தி இருக்கிறோம். முழு படமும் புதுச்சேரி பகுதியில் தயாராகி உள்ளது" என்றார்.