ஆஸ்கர் 2025 : 13 விருதுகளுக்கான நாமினேஷனில் 'எமிலியா பெரஸ்' | இந்தியன் 3 - எதிர்பார்த்த வியாபாரம் நடக்குமா? | ரூ.50 கோடி வசூலைக் கடந்த 'மத கஜ ராஜா' | ஆஸ்கர் 2025 போட்டியில் ஒரே ஒரு ஹிந்தி குறும்படம் | ஹிந்தி வெப் சீரிஸில் நடிக்க மும்பை சென்ற சமந்தா | கஜினி படம் ஏற்படுத்திய பெரும் தாக்கம் : சுனைனா நெகிழ்ச்சி | எப்போதுமே டிவி சீரியல்களில் நடிக்க மாட்டேன்: நடிகை சுமன் ராணா திட்டவட்டம் | கவனமாக இருங்கள் : ராஜ்கிரண் எச்சரிக்கை பதிவு | தெலுங்கில் ஜன., 31ல் வெளியாகும் மதகஜராஜா | சுதா கொங்கரா, சிவகார்த்திகேயன் பட தலைப்பு ‛பராசக்தி' |
'ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர், பர்ஹானா' படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'டி என் ஏ'. அதர்வா முரளி, நிமிஷா சஜயன், பாலாஜி சக்திவேல், ரமேஷ் திலக், விஜி சந்திரசேகர், சேத்தன், ரித்விகா, கே பி, சுப்பிரமணியம் சிவா, கருணாகரன், 'பசங்க' சிவக்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பார்த்திபன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஸ்ரீகாந்த் ஹரிஹரன், சத்ய பிரகாஷ், அனல் ஆகாஷ், பிரவீண் சைவி, சஹி சிவா ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் ஜெயந்தி அம்பேத்கர் தயாரித்திருக்கிறார்.
படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து அதற்கு பிந்தைய பணிகள் நடந்து வருகிறது. படம் பற்றி இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் கூறும்போது ''திவ்யா, ஆனந்த் எனும் இரண்டு முதன்மையான கதாபாத்திரங்களின் உளவியலும், வாழ்வியலும் தான் இப்படத்தின் பிரதான அம்சம். திவ்யாவாக நிமிஷாவும், ஆனந்தாக அதர்வாவும் நடித்திருக்கிறார்கள். இவர்கள் இருவரும் தினமும் பல காரணங்களால் இந்த சமூகத்தினரால் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். காயப்படுத்தப்பட்ட இந்த இரண்டு ஆன்மாக்களும் உணர்வுபூர்வமான தருணத்தில் சந்திக்கிறார்கள். அதன் பிறகு என்ன நடக்கிறது? என்பதுதான் இப்படத்தின் கதை.
பேமிலி என்டர்டெய்னராக உருவாகி இருக்கும் இந்தத் திரைப்படத்தில் ஐந்து இசையமைப்பாளர்களுடன் முதன்முறையாக பணியாற்றிருக்கிறேன். அனைத்து பாடல்களும், பின்னணி இசையும் சிறப்பாகவும், தனித்துவமாகவும் அமைந்திருக்கிறது. அதனால் படத்தின் இசை அனைத்து தரப்பு ரசிகர்களையும் நிச்சயம் கவரும். படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது” என்றார்.