அருந்ததி படம் ஹிந்தியில் ரீமேக் ஆகுவது உறுதி! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பிரபாஸ் படத்தில் பிரபல வெளிநாட்டு ஆக்சன் ஹீரோ? | விக்ரம் 63வது படத்தின் புதிய அப்டேட்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த மிருணாள் தாகூர்! | பென்ஸ் படத்தில் லாரன்ஸூக்கு ஜோடி இல்லையா? | இளன் இயக்கி, நடிக்கவுள்ள கதாநாயகி யார் தெரியுமா? | ஜூடோபியா : 9 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 2ம் பாகம் | 'தாரணி'யில் நடிகையின் கதை | போஸ் வெங்கட்டின் ஸ்போர்ட்ஸ் மூவி |

ஒவ்வொரு ஆண்டு பாலிவுட்டில் உள்ள திரைக் கலைஞர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் திரைக்கு பின்னால் வேலை செய்யும் ஊழியர்களுக்கு மகா ஆரோக்யா கேம்ப் இலவசமாக நடத்தப்படுகிறது. இந்தாண்டுக்கான அறிமுக நிகழ்ச்சி மும்பையில் நடந்தது. இதில் நடிகை பூனம் தில்லான், நடிகர்கள் தீபக் பிரசார், விந்து தாரா சிங், தீரஜ் குமார், இசையமைப்பாளர் திலீப் சென், பாடகி மதுஸ்ரீ உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்பித்தனர்.
நடிகர் தீரஜ் குமார் கூறுகையில் ‛‛டாக்டர் தர்மேந்திர குமார் தனியாக இதை துவங்கினார். பின்னர் அவருக்கு நாங்கள் எல்லாம் துணை நின்றோம். இது திரையுலகினருக்கான ஒரு வரலாற்று முன்னெடுப்பு. ஜன., 19ல் அனைவரும் இந்த முகாமில் பங்கேற்று பயன் பெறுங்கள்'' என்றார்.
டாக்டர் தர்மேந்திர குமார் கூறுகையில், ‛‛இந்த ஆண்டு முகாமுக்கு ரூ.4 கோடிக்கு மேல் மருந்துகளை கொண்டு வருகிறோம். ஒவ்வொரு நோய்க்கும் பல மருத்துவர்கள் இங்கு வருவார்கள். இம்முறை பெண்களுக்கும் பல சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன'' என்றார்.