விடாமுயற்சி பொங்கல் ரிலீஸ் ஒத்திவைப்பு | பிரபாஸ் பட வாய்ப்பை தவறவிட்ட மாளவிகா மோகனன் | பரோஸ் : பணத்துக்காக அல்ல... என் மக்களுக்காக... - மோகன்லால் | விடுதலை-2 வை தொடர்ந்து வாடிவாசலும் அரசியல் பேசுகிறதா? | விஜய்யின் 69வது படப்பிடிப்பு தளத்துக்கு பலத்த செக்யூரிட்டி போட்ட எச்.வினோத்! | 2025 - எதிர்பார்க்கப்படும் தமிழ்ப் படங்கள் | பிளாஷ்பேக்: 'நடிகவேள்' எம் ஆர் ராதாவிற்கு ரத்தினக் கம்பளம் விரித்த “ரத்தக்கண்ணீர்” | 'விடாமுயற்சி' வெளியீடு பற்றி வதந்தி பரப்புவது யார் ? | காஞ்சனா 4ம் பாகத்தில் பேயாக பூஜா ஹெக்டே! | தனுஷுக்கு உடல்நலக் கோளாறா?: உண்மை என்ன? |
2024ம் ஆண்டை பொறுத்தவரை தமிழ் சினிமாவில் சுமார் 240 படங்கள் வெளியாகியுள்ளன. இதில் சில படங்களே குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்றன. சில படங்கள் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றாலும் வசூல் ரீதியாக பெரிதளவில் லாபத்தை கொடுக்கவில்லை. அதேநேரத்தில் இந்தாண்டு சிலருக்கு மட்டும் அதிர்ஷ்டமாக அமைந்துள்ளது.
இசை
2024ல் அதிக படங்களுக்கு இசையமைத்தவர்களில் ஜி.வி. பிரகாஷ் முதலிடத்தில் உள்ளார். இந்தாண்டு மட்டும் அவர், “மிஷன் சாப்டர் 1, கேப்டன் மில்லர், சைரன், ரெபெல், கள்வன், டியர், தங்கலான், அமரன்” ஆகிய 8 படங்களுக்கு இசையமைத்து முன்னணியில் உள்ளார்.
ஹீரோ
அதேபோல், அதிக படங்களில் நாயகனாக நடித்தவர்களில் விஜய் சேதுபதி, விஜய் ஆண்டனி, ஜிவி பிரகாஷ் ஆகியோர் தலா மூன்று படங்களில் ஹீரோவாக நடித்து முதலிடத்தை பங்கிட்டு கொள்கின்றனர்.
விஜய் சேதுபதி - 'மெர்ரி கிறிஸ்துமஸ், மகாராஜா, விடுதலை 2'
விஜய் ஆண்டனி - ‛ரோமியோ, மழை பிடிக்காத மனிதன், ஹிட்லர்'
ஜிவி பிரகாஷ் - 'ரெபெல், கள்வன், டியர்'
ஹீரோயின்
2024ல் அதிக படங்களில் நடித்த நாயகிகள் வரிசையில் பிரியா பவானி சங்கர் முதலிடத்தில் உள்ளார். அவர், 'ரத்னம், இந்தியன் 2, டிமாண்டி காலனி 2, பிளாக்' ஆகிய 4 படங்களில் நாயகியாக நடித்துள்ளார். 2023ல் அதிகப் படங்களில் நடித்த நாயகி என்ற பெயரைப் பெற்ற ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து இந்த ஆண்டில் ஒரு படம் (டியர்) மட்டுமே வெளிவந்தது.