குட் பேட் அக்லி டிரைலர் எப்போது? | பழம்பெரும் ஹிந்தி நடிகர் மனோஜ் குமார் காலமானார் | ஏப்ரல் முதல் வாரம் முழுவதும் நெட்பிளிக்ஸ் ஆதிக்கம் | ரூ.52 கோடி வசூலுடன் வலம் வரும் வீர தீர சூரன் | 'இட்லி கடை' புதிய வெளியீட்டுத் தேதி எப்போது? | 'குட் பேட் அக்லி' முன்பதிவு இன்று முதல் ஆரம்பம் | பாட்டு பாடி, பழைய நினைவுகளை பகிர்ந்து பாரதிராஜாவை தேற்றிய கங்கை அமரன் | பெண் குழந்தைக்கு தந்தையான ரெடின் கிங்ஸ்லி | துருவ நட்சத்திரம் : காத்திருக்கும் விக்ரம் | 25 வயதில் மகன் இருக்கையில் தந்தையாக நடிக்க தயங்கும் ஹீரோக்கள் : சசிகுமார் ஆதங்கம் |
வெற்றிமாறன் இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில், விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் 'விடுதலை 2' படம் அடுத்த மாதம் டிசம்பர் 20ம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் டிரைலர் நேற்று வெளியானது.
டிரைலரில் இடம் பெற்றுள்ள சில வசனங்கள் உடனடியாக சர்ச்சைக்கு ஆளாகியுள்ளது. டிரைலரின் முடிவில் விஜய் சேதுபதி பேசுவது போல ஒரு வசனம் இடம் பெற்றுள்ளது. “தத்துவம் இல்லாத தலைவர்கள் ரசிகர்களை மட்டும்தான் உருவாக்குவாங்க. அது முன்னேற்றத்துக்கு வழிவகுக்காது,” என்று பேசுகிறார்.
அந்த வசனம் விஜய்யின் அரசியல் நிலைப்பாட்டை விமர்சிப்பதாக உள்ளதென நேற்று டிரைலர் வெளியான உடனேயே பலரும் கமென்ட் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். சமூக வலைதளங்களில் அந்த வசனத்தை அப்படியே பதிவு செய்து, விஜய்யை பலரும் விமர்சித்தார்கள். அதைக் கண்டு பொறுக்க முடியாத விஜய் ரசிகர்கள் பதிலுக்கு வெற்றிமாறன் பற்றி கமெண்ட் செய்து வருகிறார்கள்.
பொதுவாக தனது திரைப்படங்களில் விஜய்தான் 'பன்ச்' வசனம் பேசுவார். அவர் அரசியலில் இறங்கியதும் அவரை விமர்சித்தும் 'பன்ச்' வசனம் வந்துவிட்டதே என ரசிகர்கள் பேசிக் கொள்கிறார்கள்.