கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை | சூரியின் ‛மண்டாடி' படத்தில் இணைந்த இளம் நடிகர்! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை எப்போது? | 'பெத்தி' படத்தில் வயதான தோற்றத்தில் ஜெகபதி பாபு | அஜித்குமாரின் பிறந்தநாளில் வெளியாகும் அஜித் ரேஸ் படம்! | கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் |

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய்பல்லவி நடிப்பில் வெளியாகி உள்ள ‛அமரன்' படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. மூன்று வாரங்களை நெருங்கிவிட்டபோதிலும் படத்திற்கு வரவேற்பு தொடர்ந்து இருக்கிறது. வசூலும் 250 கோடியை கடந்து சென்று கொண்டிருக்கிறது.
இந்நிலையில், 'அமரன்' படத்தை திரையரங்குகளில் வெளியான எட்டு வாரங்கள் கழித்தே ஓடிடி தளத்தில் வெளியிட வேண்டும் என்று தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், ரெட் ஜெயண்ட் மூவிஸ் மற்றும் சிவகார்த்திகேயனுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் பொது செயலாளர் ஆர் பன்னீர்செல்வம், "'அமரன்' திரைப்படம் அனைத்து திரையரங்குகளிலும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதால் அதன் ஓடிடி வெளியீட்டை தள்ளி வைக்க வேண்டும். நல்ல உள்ளடக்கம் உள்ள திரைப்படம் ரசிகர்களை குடும்பத்துடன் திரையரங்குகளுக்கு ஈர்க்கும் என்பதற்கு 'அமரன்' படத்தின் மாபெரும் வெற்றியே உதாரணம்'' என தெரிவித்துள்ளார்.