சிவகார்த்திகேயன் 24வது படம் தள்ளிப்போகிறதா? | தனுஷ் 54வது படத்தில் இணைந்தது குறித்து பிரித்வி பாண்டியராஜன் நெகிழ்ச்சி! | சிவராஜ் குமாரின் 131வது படம் அறிவிப்பு | 'லியோ'வில் என்னை வீணாக்கினார் லோகேஷ் : சஞ்சய் தத் கமெண்ட் | 68 வயதில் 3 நடிகைகளுடன் டான்ஸ் : கெட்ட ஆட்டம் போட்ட மொட்ட ராஜேந்திரன் | ஆடி வெள்ளி ரீமேக்கில் நயன்தாராவுக்கு பதில் திரிஷா | இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் |
இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வரலாற்று பேண்டஸி படமாக உருவாகியுள்ள படம் 'கங்குவா'. பாலிவுட் நடிகை திஷா பதானி கதாநாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் பாலிவுட் நடிகர் பாபி தியோல் நடித்துள்ளார். நவம்பர் 14ம் தேதி ரிலீசாகும் இப்படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழு மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.
சென்னையில் படத்தின் 3டி டிரைலர் வெளியீட்டு விழாவில் கங்குவா குழுவுடன் சூர்யா கலந்துகொண்டார்.
அப்போது சூர்யா பேசியதாவது: தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இல்லையென்றால் கங்குவா திரைப்படம் நிகழ்ந்திருக்காது. இந்தப் படத்தைப் பொறுத்தவரை ஒவ்வொரு நாளும் அழகாக இருந்தது. கிட்டத்தட்ட 170 நாள்கள் படப்பிடிப்பு நடத்தினோம். ஒரு கனவுபோல் உருவானது. பணத்தைத் தாண்டி முழு ஈடுபாடுடன் மொத்த குழுவும் உழைத்திருக்கிறோம். ஒளிப்பதிவாளர் வெற்றி, கங்குவாவின் தரத்தை எங்கோ கொண்டு சென்றுவிட்டார். இந்திய சினிமாவிலிருக்கும் படைப்பாளிகளும் இயக்குனர்களும் ஒளிப்பதிவைப் பார்த்து மிரண்டு போவார்கள். மிக பணிவாகவே இதைச் சொல்கிறேன்.
படத்தைப் பார்த்த பாலிவுட் தயாரிப்பாளர், இயக்குனர் கரண் ஜோஹர் இது எப்படி சாத்தியமானது என ஆச்சரியப்பட்டார். இதற்கு முன், இப்படியொரு திரையரங்க அனுபவத்தைக் கண்டிருக்க மாட்டீர்கள். 700 ஆண்டுகளுக்கு முந்தைய கதையான இது வெறும் சண்டைப்படமாக மட்டும் உருவாகவில்லை. ஒருவனுக்குள் இருக்கும் அகமும் புறமும் பேசப்பட்டிருக்கிறது. மன்னிப்பை பிரதானமாக வைத்திருக்கிறோம்.
ஒருத்தர் உண்மையாக வேலை செய்தாலே பலன் கிடைக்கும்போது கங்குவாவிற்கு 3000 பேர் வேலை செய்திருக்கின்றனர். மீண்டும் சொல்கிறேன், படம் நெருப்பு மாதிரி இருக்கும். கங்குவா படத்தை வாயை பிளந்து பார்ப்பார்கள்; தமிழ் சினிமாவில் இப்படி ஒரு படம் எடுக்க முடியும் என்பதை காட்டும் படமாக அமையும். படம் வெளியாகும் நவ.,14ம் தேதி இரட்டை தீபாவளியாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.