சூர்யா 45 படத்திலிருந்து ஏஆர் ரஹ்மான் விலகல் | சோஷியல் மீடியா ட்ரோலில் பாதிக்கப்படுவது நடிகைகள் தான் - வாணி போஜன் | மீண்டும் சீரியலில் 'மோதலும் காதலும்' சமீர்! | இந்தியாவில் முதல் நாளில் அதிக வசூலைக் குவித்த டாப் 10 படங்கள் எது தெரியுமா...? | புதிய கார் வாங்கிய ஸ்வாதி கொன்டே! | ஆசை நிறைவேறிய மகிழ்ச்சியில் அணிலா! | தமன்னாவின் நடனத்திற்கு தடை போட்ட ஹரிஹரன்-சங்கர் மகாதேவன் அன் கோ | இவர்தான் பஹத் பாசிலா ? 'புஷ்பா 2' பார்த்த நடிகைக்கு வந்த சந்தேகம் | ஹேக் செய்யப்பட்ட ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் வாட்ஸ்அப் கணக்கு | ஹீரோவை கைகுலுக்க மறந்த ஹீரோயின் ; தொடரும் கைகுலுக்கல் கலாட்டா காமெடி |
இந்திய சினிமாவில் சில வருடங்களுக்கு முன்பு வரை ஒவ்வொரு மொழியிலும் நேரடிப் படங்கள்தான் மிக அதிகமாக வெளிவரும். ஆனால், கொரானோ காலகட்டத்தில் ஓடிடியின் வளர்ச்சி ஒரு பக்கம், பான் இந்தியா படங்களின் வருகை ஒரு பக்கம் என டப்பிங் படங்களும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் வர ஆரம்பித்தன.
ஒவ்வொரு மொழியிலும் பெரிய படங்கள் அனைத்துமே நான்கைந்து மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு பான் இந்தியா படங்களாக வெளிவருகின்றன. அவற்றில் அனைத்துப் படங்களுக்கும் வெற்றி கிடைத்துவிடுவதில்லை. ஒரு சில படங்களுக்குத்தான் வெற்றி கிடைக்கிறது.
அந்த விதத்தில் இந்த வருட தீபாவளிக்கு தமிழ், தெலுங்கில் வெளியான இரண்டு டப்பிங் படங்களுக்கு எதிர்பார்த்ததை விட வரவேற்பும், வசூலும் கிடைத்து லாபத்தைப் பார்க்க ஆரம்பித்துவிட்டார்களாம்.
தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான 'அமரன்' படம் தெலுங்கிலும் டப்பிங் ஆகி ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் வெளியானது. அங்கு வெளியான நேரடிப் படங்களுடன் போட்டி போட்டு இப்படமும் நல்ல வசூலைக் குவித்துள்ளது. அங்கு கடந்த நான்கு நாட்களில் மொத்தமாக 16 கோடி வரை வசூலித்து இப்போதே 4 கோடிக்கும் அதிகமான லாபத்தைப் பெற்றுள்ளதாம். இந்த வருடத்தில் தமிழிலிருந்து தெலுங்கில் வெளியான படங்களில் நிறைவான லாபத்தை இந்தப் படம் பெற்றுத் தரும் என்கிறார்கள்.
தெலுங்கில் துல்கர் சல்மான் நடிப்பில் உருவான 'லக்கி பாஸ்கர்' படம் தமிழிலும் டப்பிங் ஆகி வெளியானது. 'அமரன்' படம் காரணமாக இந்தப் படத்திற்கு முதலில் நிறைய தியேட்டர்கள் கிடைக்கவில்லை. சுமார் 150 தியேட்டர்களில்தான் படத்தை வெளியிட்டுள்ளார்கள். படத்திற்கான வரவேற்பும், விமர்சனங்களும் சிறப்பாக இருந்ததால் தற்போது 50க்கும் மேற்பட்ட தியேட்டர்கள் கூடுதலாகக் கிடைத்துள்ளதாம். தமிழில் இதுவரையில் சுமார் 4 கோடி வரை வசூலித்துள்ளது என தகவல்கள் வந்துள்ளது. இந்த வசூல் இன்னும் அதிகமாகலாம் என்பதே பாக்ஸ் ஆபீஸ் தகவல்.
இரண்டு மொழிகளிலும் மாறி மாறி தலா ஒரு டப்பிங் படம் வசூலித்துள்ளது, நேரடிப் படங்களை வாங்கி வெளியிட்டவர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.