அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
விஜய் நடித்த தமிழன் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் டி .இமான் . தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களுக்கு பிசியாக இசையமைத்து வருகிறார். கடந்த 2008ம் ஆண்டு மோனிகா ரிச்சர்ட் என்பவரை திருமணம் செய்து கொண்டார் டி.இமான். அவர்களுக்கு பிளஸிகா, வெரோனிகா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.
இந்த நிலையில் திருமணமாகி 13 ஆண்டுகளுக்குப் பிறகு டி. இமான், மோனிகாவுக்கு இடையில் கருத்து மோதல் ஏற்பட்டு 2021ம் ஆண்டு விவாகரத்து பெற்றார்கள். அதையடுத்து ஆறு மாதங்களில் அமலி உபால்டு என்பவரை மறுமணம் செய்து கொண்டார் டி. இமான்.
இப்படியான நிலையில் தற்போது கண் பார்வை இழந்த ஒரு தம்பதிக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை இருக்கும் நிலையில், அவர்களின் இரண்டாவது பெண் குழந்தையை வளர்க்க சிரமப்பட்டதை அறிந்த டி. இமான், அந்த பெண் குழந்தையை தத்தெடுத்துள்ளார். இது குறித்த செய்தி வெளியானதை அடுத்து டி. இமானுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.