சினிமா துறை நாறிப் போய் உள்ளது : சனம் ஷெட்டி கோபம் | பேட் மேன் பட நடிகர் வால் கில்மர் காலமானார் | குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் வெளியானது | 29 வயதா.... நம்பமுடியவில்லை என்கிறார் ராஷ்மிகா | ஹிப் ஹாப் ஆதியின் படத்தை இயக்கும் ஜோ இயக்குனர் | காதல் பிரேக்கப்பிற்கு சானியா ஐயப்பன் சொன்ன அதிர்ச்சி காரணம் | முன்கூட்டியே ரிலீசாகும் மோகன்லாலின் தொடரும் படம் | எம்புரான் டைட்டில் : நன்றி கார்டில் சுரேஷ்கோபி பெயர் நீக்கம் | வீர தீர சூரன் வெற்றி : வின்டேஜ் புகைப்படம் பகிர்ந்த துருவ் விக்ரம் | பெண் விரிவுரையாளருக்கு 2.68 லட்சம் நஷ்ட ஈடு வழங்க மோகன்லால் பட தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவு |
நடிகர் விஜய் தனது 69வது படத்தோடு சினிமாவுக்கு முழுக்கு போட்டு விட்டு முழு நேர அரசியலுக்கு வரப்போகிறார். இதன் காரணமாக அடுத்தபடியாக விஜய் இடத்தை சிவகார்த்திகேயன் தான் பிடிப்பார் என்கிற கருத்துக்கள் ஊடகங்களில் வெளியாகி வருகின்றன. இப்படியான நிலையில், தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் அமரன் படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சி மலேசியாவில் நடைபெற்றபோது, அது குறித்து ஒரு பதில் கொடுத்து இருக்கிறார் சிவகார்த்திகேயன்.
அப்போது அவரை நோக்கி அடுத்த தளபதி நீங்கள்தான் என்று ரசிகர்கள் கூறியபோது, அதை மறுத்துள்ளார் சிவகார்த்திகேயன். அவர் கூறுகையில், ''தமிழ் சினிமாவில் ஒரே ஒரு தளபதி தான், ஒரே ஒரு தல தான், ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் தான், ஒரே ஒரு உலக நாயகன் தான். அதனால் அடுத்த என்ற பேச்சுக்கே இடமில்லை. இவர்களெல்லாம் நடிப்பதை பார்த்து தான் நான் சினிமாவுக்கு வந்தேன். அதனால் அவர்களை போன்று நாமும் நல்ல கதைகளை தேர்வு செய்து நடிக்க வேண்டும் என்று வேண்டுமானாலும் நினைக்கலாம். ஆனால் அவர்களாகவே ஆக வேண்டும் என்று நினைப்பது சரி கிடையாது. அது தவறு என்று நான் நினைக்கிறேன்,'' என கூறியிருக்கிறார் சிவகார்த்திகேயன்.